Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* சமூகநீதியின் வழியே சமத்துவம் வளர வேண்டும் என்றால் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். – விசிக தலைவர் திருமாவளவன்* நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது. – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* அரசியல் என்பது தனிநபர் அல்ல,…

2ம் கட்ட தேர்தல் குஜராத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்பட தலைவர்கள் முற்றுகை

அகமதாபாத்: குஜராத் தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 182  சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள்( 5ம் தேதி) நடைபெற உள்ளது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு பிரசாரம் இன்று மாலையுடன்…

காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு பாஜவில் பொறுப்பு

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் சுனில் ஜாகர் ஆகியோரை தேசிய செயற்குழு உறுப்பினர்களாக பாஜ அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல, உத்தரப்பிரதேச பாஜ மாநில தலைவர் சுனில் ஜாகரையும் தேசிய செயற்குழு உறுப்பினராக பாஜ நியமித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்து அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜவில் சேர்ந்த…

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். டெல்லியில் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று கூடுகின்றனர். Source link

டெல்லி அரசின் மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்

ஐதராபாத்: டெல்லி அரசின் மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் சட்டமேலவை உறுப்பினராக இருக்கும் கவிதாவை டிச.6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஐதராபாத்தில் தன் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் தன்னை விசாரிக்கலாம் என சிபிஐ-க்கு கவிதா கடிதம் எழுதியுள்ளார்.   Source link

காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி: ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

அகர்மால்வா: காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி என்று ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அகர் மால்வா அடைந்தது. அப்போது மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:   காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியா  ஒரு  துரோகி. உண்மையான 24 காரட் துரோகி. கட்சியில் இருந்து  வெளியேறிய பிறகு மூத்த தலைவர்…

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகி நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகி V.P.R.செல்வகுமார் நீக்கக்கப்படுவதாக  விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் V.P.R.செல்வகுமார் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (02.12.2022) முதல் நீக்கப்படுகிறார். இவருடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும்…

அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: கழக மாணவர் அணியின் கட்டமைப்பை வலுபடுத்த தீர்மானம்

சென்னை: தி.மு.க. மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 02.12.2022 வெள்ளிக்கிழமை, காலை 09.30 மணியளவில், சென்னை, “அண்ணா அறிவாலயத்தில்” உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலசோனை கூட்டத்தில் கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கலந்தாலோசனை கூட்டத்தில், அணியின் துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த்,…

கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வலுவான கூட்டணியுடன் தான் நாம் போட்டியிடுவோம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நடந்தது. இதில், திமுக முன்னாள் பொதுச் செயலாளர்…

மோடியின் தொழிலதிபர் நண்பர்கள் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பிரதமர் மோடியின் தொழிலதிபர் நண்பர்கள், ஊடகத் துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரதமர் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் நண்பரான கவுதம் அதானி, ஊடகத்தையும் கபளீகரம் செய்யத் தொடங்கி விட்டார். ரூ.403.85 கோடி மதிப்புள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை பங்குதாரர்களின் விருப்பமின்றி கபளீகரம் செய்திருக்கிறது அதானியின் நிறுவனம். இதனை மிரட்டி வாங்கியதாகவும் பொருள்…

1 56 57 58 59 60 161