Browsing: அரசியல்

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்: இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மீண்டும் தேர்வாகும் பூபேந்திர படேல்

ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்க வசதியாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் ஒப்படைத்தார். குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜ  கைப்பற்றி மாபெரும் வெற்றி  பெற்றது.  காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி  பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5  இடங்களும், சமாஜ்வாதி கட்சி 1, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி …

தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவைக்கு உரிமைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்…

சொல்லிட்டாங்க…

* இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசிடமிருந்து உரிய இழப்பீடு ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ*நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளை தேர்வு செய்ய, அகில இந்திய நீதித்துறை சேவை கொண்டு வருவதற்கான திட்டம் இல்லை.- ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ*உலக பட்டினி குறியீடு தொடர்பாக, வெளியிலிருந்து நம் நாட்டின் மதிப்பை குறைக்கும் விஷயங்களை அவைக்கு கொண்டுவரும் முன் எம்பிக்கள் சுயஆய்வு செய்ய வேண்டும்.- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்*நாடாளுமன்ற தேர்தலில்…

மேற்குவங்கமா? குஜராத்தா?: இடதுசாரிகளின் சாதனையை முறியடிக்க பாஜக இன்னொரு தேர்தலில் ஜெயிக்கணும்!

அகமதாபாத்: மேற்குவங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை முறியடிக்க குஜராத்தில் பாஜக இன்னொரு முறை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 1997ல் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து இடதுசாரி கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அம்மாநில முதல்வராக பதவியேற்ற ஜோதிபாசு, கடந்த 1977 முதல் 2000ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். ஜோதிபாசு மறைவுக்கு பின் புத்ததேவ் பட்டாச்சார்யா பதவியேற்றார்.  1977 முதல் 2006 வரை மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சி இருந்தது. தொடர்ந்து 7…

இமாச்சலில் காங்கிரஸ் அபார வெற்றி; முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி?: சிம்லாவில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் அடிபடுகிறது. இன்று சிம்லாவில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆளும் பாஜகவை தோற்கடித்து 43.90 சதவீத வாக்குகளைப் பெற்று 40 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வர் யார்? என்பது குறித்த விவாதம் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது. அந்தப் பட்டியலில் சுக்விந்தர் சிங் சுகு,…

சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது என ஈபிஎஸ் மனு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல என ஈபிஎஸ் மனுவில் கூறியுள்ளார். Source link

இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று (9ம் தேதி) பேரூராட்சிகளிலும், 13ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்த புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள்…

 பாமக கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு – Dinakaran

சென்னை: தைலாபுரத்தில் இன்று  நடைபெற இருந்த 7 மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டங்கள் புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர்,  மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடனான கலந்தாய்வு  தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் (இன்று) 9.12.2022 வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் வடமாவட்டங்களை இன்று  தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் இன்று …

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி: பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தோல்வி அடைந்தாலும் அம்மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என பிரதமர் மோடி பேசினார். Source link

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்: கோவை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் ஐக்கியம்

சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. கட்சி பல அணிகளாக பிரிந்து இருக்கின்றன. அதே வேளையில் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளாக பிரிந்து தங்கள் செல்வாக்கை…

1 53 54 55 56 57 161