Browsing: அரசியல்

அண்ணாமலையின் ரபேல் வாட்ச் டிவிட்டரில் டிரெண்டிங்: பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருவதால் பரபரப்பு

சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வாட்ச் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வித்தியாசமான ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாயில் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து தினந்தோறும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த கடிகாரத்தின் விலை குறித்தும், நேர்மையான…

டிச.27-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: டிச.27-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமையில் டிச.27-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் கூட்டம் நடைபெறவுள்ளது. Source link

ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில வாரியான ஒதுக்கீட்டை உடனே அறிவிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில வாரியான ஒதுக்கீட்டை உடனே அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: ஜூன் மாதம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உலகத்தின் பல்வேறு நாடுகளில் முன்பதிவு தொடங்கிவிட்டன. ஆனால், இதுவரை ஹஜ் பயணம் தொடர்பாக ஒன்றிய பாஜ அரசு அறிவிக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இது, இஸ்லாமியர்கள் மத்தியில் மிகுந்த வருத்ததையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல்…

ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு ஊழியர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை: வேலை இழப்புகளில் இருந்து ஐடி ஊழியர்களை பாதுகாக்க, ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று செயற்குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் வாசுகி, சண்முகம் மற்றும் மாநில…

ஆன்லைன் சூதாட்டத்தை 162வது பிரிவின் கீழ் தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை 162வது பிரிவின் கீழ் தடை செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும் போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு…

சசிகலா வேண்டுகோள் பொங்கல் பரிசு தொகுப்புடன் விலையில்லா வேட்டி சேலை, கரும்பு

சென்னை: சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருப்பதால் கரும்பு விவசாயிகளின் நிலை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு வழங்குவதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடம் அளிக்காமல் விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பு கொள்முதலை ஆரம்பிக்க வேண்டும். தமிழக அரசு கடந்த ஆண்டு போல மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரொக்கமாக பணம் கொடுத்துவிடலாம். ஆனால்…

அன்னூர் டிட்கோ : தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாஜ வரவேற்பு: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை: அன்னூர் டிட்கோ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், அன்னூர் பகுதியில்  விவசாய நிலங்கள் டிட்கோ மூலம்  கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு 1630 ஏக்கர் தரிசு நிலம் மட்டும் டிட்கோ மூலம் எடுத்து கொள்ளும். மீதி இடத்தை விவசாயிகள் கொடுத்தால் மட்டுமே எடுத்து கொள்வோம் என கூறி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையினை பாஜ வரவேற்கிறது. சமூக ஊடகங்களில் அண்ணாமலை கையில்…

பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மரியாதை

மறைத்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பழகன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்பழகன் படத்திற்கு மரியாதையை செலுத்தினார். மறைந்த அன்பழகன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் பிறந்துள்ளார். இவர் இயற் பெயர் ஆனது ராமய்யா, திராவிட சிந்தனைகளில்…

பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ பயணித்த அமித் ஷா – மம்தா பானர்ஜி: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கொல்கத்தா: பாஜக – திரிணாமுல் மோதலுக்கு மத்தியில் ஒரே காரில் 200 கி.மீ தூரம் அமித் ஷா – மம்தா பயணித்தது, மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கிழக்கு மண்டல கவுன்சிலின்  (இ.இசட்.சி) 25வது கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில்  நடந்தது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் துணை  முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஆலோசனை கூட்டம் நடக்கும்…

சொல்லிட்டாங்க…

முரட்டு ஆட்டம் ஆடும் கால்பந்து வீரர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படுவது போல. வடகிழக்கில் வளர்ச்சியின்மை, ஊழல், அமைதியின்மைக்காக சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது. :- பிரதமர் மோடிநாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு அஞ்சி ஓடி ஒளியும் முதல் பிரதமர் மோடிதான், சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தவே பயப்படுகிறார். : – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்ரஷ்யா-உக்ரைன் போரில் மோடி மத்தியஸ்தம் செய்கிறார். மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லைப் பிரச்னையில் கண்ணை மூடிக்கொள்கிறார். :- சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்எல்லையில் இந்திய வீரர்கள் பலர்…

1 48 49 50 51 52 161