Browsing: அரசியல்

விரைவில் பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் பேச்சு

அவனியாபுரம்: அதிமுகவில் தற்போது தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில், விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவோம். நான் பொருளாளராக இருந்த காலமான 2021-2022 மார்ச் மாதத்தில் முடிவடைந்த வரவு…

சென்னையில் அனுமதியின்றி போராட்டம்: அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் அனுமதியின்றி 33 இடங்களில் போராட்டம் நடத்தியதாக கூறி அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்றைய தினம் விலைவாசியை கண்டித்து, அதிமுகவின் இ .பி.எஸ் . அணியின் சார்பாக சென்னையில் 33 இடங்களில் போராட்டம் நடைபெற்றது, கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுருந்தன இந்த சூழ்நிலையில் போராட்டங்களுக்கு காவல் துறைக்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், குறிப்பாக அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்…

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.. ஜெயக்குமார் கேள்வி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்கவில்லை, பொதுக்குழுதான் நீக்கியது. ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கூறினார். Source link

அதிமுக எங்களுக்கு தான் சொந்தம்; கட்சி நிதியில் கை வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும்: ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

சென்னை: அதிமுக கட்சி நிதியை கையாடல் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, வேப்பேரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்பு ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுகவில் இப்பொழுது நிலவக்கூடிய இந்த சூழல் யாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தேர்தலின்போது எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி கட்சியை வைத்திருந்தார்களோ, அந்நிலையில் கட்சியை காப்போம். நான் பொருளாளராக இருக்கும்போது அளித்த கணக்கை தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.…

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடிக்கு தொண்டர்கள் பாடம் புகட்ட வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

சென்னை: எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேசினர். ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்: நான்  ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதற்கு மூன்று காரணம். ஒன்று ஜெயலலிதா,  யாரையாவது தன்னுடைய வாழ்நாளில் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார்  என்றால் ஓபிஎஸ்சைதான். அவர் ஒரு விழாவுக்கு செல்ல முடியவில்லை என்றால், …

ஓபிஎஸ்சின் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் இல்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் யாரும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் போட்டி கூட்டம் என்பது, ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல. அந்த கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம்தான் அது. அது கட்சி கூட்டம் கிடையாது. அந்த நிறுவனத்தின் சார்பில் விளம்பரம் அளித்துள்ளார்கள். ஆட்களை தேர்வு செய்கிறார்கள். எனவே இந்த கூட்டத்தைக் கட்சி கூட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. கட்சிக்கும்…

பொதுக்குழு முறையாக நடைபெறும்; அதற்காக அறிவிப்பு விரைவில் வெளிவரும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: பொதுக்குழு முறையாக நடைபெறும்; அதற்காக அறிவிப்பு விரைவில் வெளிவரும் என  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினர் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக கட்சி தலைமை அலுவலகம், அதிமுக தலைமை கழக முக்கிய நிர்வாகிகள், அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இந்த அணி முன்னணி வகிக்கிறது. அதேநேரம், தமிழகம் முழுவதும் தொண்டர்கள் ஆதரவு தனக்குத்தான் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியினர்…

ஓபிஎஸ்-ஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: ஓபிஎஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023க்குள் நடத்த வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆளுநர் உரையில் அரசுப்பணிகளில் 10402 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப உறுதி அளிக்கப்பட்ட நிலையில், துறைவாரியான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை. அத்துடன் யுபிஎஸ்சி மற்றும் டின்பிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு…

பாஜ கூட்டணியில் இருந்து விலகல் இபிஎஸ் தான் முடிவை எடுத்தார்: புகழேந்தி குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம், பாஜ கூட்டணியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டவர் இபிஎஸ் தான் என்று அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் புகழேந்தி கூறியதாவது: பிஜேபியோடு கூட்டணி முடிந்து விட்டது, ஒட்டுமொத்தமாக விலகி விட்டோம் என்பதை தான் சி.வி.சண்முகத்தின் பேச்சின் மூலமாக எடப்பாடி பழனிசாமி உணர்த்தியிருக்கிறார். அது ஒட்டுமொத்தமாக இபிஎஸ்சின் முடிவு என்பதை தெளிவாகி விட்டது. நான்கு…

1 47 48 49 50 51 161