Browsing: அரசியல்

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து எடப்பாடி அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலையில் வருகிற 2ம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று அதிமுக விவசாய பிரிவின் சார்பில் வருகின்ற 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன். இந்த நிலையில், திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து…

அதிமுகவின் எந்த அணியுடன் பாஜ கூட்டணி வைத்துள்ளது? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: பிளவுபட்ட அதிமுகவில் பாஜ எந்த கூட்டணியில் இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு நிறுவன நாளை காங்கிரசார் நேற்று நாடு முழுவதும் கொண்டாடினர். சத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் கொடியை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்தார். அப்போது, சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், கட்சி அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்,…

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொடரும்: பாலகிருஷ்ணன் பேட்டி

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: பொங்கல் தொகுப்புக்கு கரும்பை இந்தாண்டு அரசு கொள்முதல் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. எனவே கரும்பை  கொள்முதல் செய்ய வேண்டும்.புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, சேலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கோயிலில் வழிபாடு மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் சாதி…

ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார் எனவும் குற்றம் சாட்டினார்.  Source link

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்; அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல், களத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். Source link

ஆளுநர் மாளிகை நாளை முற்றுகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை: ‘ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ‘ஒன்றிய அரசு தலையிட்டு, ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என் ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி 29ம் தேதி(நாளை) ஆளுநர் மாளிகை முற்றுகை இயக்கத்தை அறிவித்துள்ளது. அரசியல்…

2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார் பாஜ நிர்வாகிகளுடன் நட்டா ஆலோசனை

கோவை: கோவையில் நிர்வாகிகளுடன் பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை நடத்தினார். ஆபாச ஆடியோ லீக், அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம், பாஜவினர் என்ஐஏ அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி கொள்ளையடித்தது என தமிழக பாஜவும், மாநில தலைவர் அண்ணாமலையும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளனர். இதனால் பாஜ மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது, பாஜ தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கவும்,…

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும்: பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

கோவை: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் ஜே.பி. நட்டா, தமிழகத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரமும் மேற்கொண்டார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நட்டாவுக்கு, கோவை விமான நிலையத்தில்…

ஓபிஎஸ், சசிகலா பற்றி ஆலோசனை நடத்தி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா குறித்துஆலோசிக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கு கிளை கழக நிர்வாகிகள் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. அதிமுகவில்…

இலவச வேட்டி, சேலை, கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ2500 வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை,: இலவச வேட்டி சேலை, கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும்…

1 44 45 46 47 48 161