Browsing: அரசியல்

40,000 மதிப்புள்ள கேமராவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதா?.. செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை..!

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களுடன் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜவில் உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக அறிவித்தார். அதே நேரத்தில் என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை போலீசிடம் வழங்கி அண்ணாமலை குறித்து விசாரிக்க வலியுறுத்துவேன் என்றும் டிவிட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர்…

அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார்: செல்லூர் ராஜூ பாராட்டு

மதுரை: சர்வதேச அளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபடிப்போட்டிக்கு இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான கபடிப்போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்து வருகிறது. இப்போட்டிகளை நேற்று துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழக நிதி அமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. தற்போது திமுக ஆட்சியில், அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்…

பாமக தயவில்தான் ஜெயலலிதா முதல்வரானார்: எடப்பாடி தரப்புக்கு பாமக பதிலடி

சென்னை: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, அதிமுக நான்காக உடைந்துள்ளது. இதனால் திமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது என கூறியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது, பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்றிவிட்ட ஏணி அதிமுக தான். அதிமுக ஏற்றிவிடவில்லை என்றால் பாமக என்ற ஒரு கட்சியே கிடையாது. அதிமுக சீட்டு கொடுத்ததால் தான்…

சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அரசுக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில் தேனீர் கடைகளில் இரட்டைக்  குவளை முறை பயன்படுத்தப் படுகின்ற கொடுமையும் நடக்கிறது. காலம் காலமாகப் புரையோடிக் கிடக்கும் சாதி ஆதிக்க வன்மம், ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீதான தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டிற்கே பெருத்த…

பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். Source link

பெண்களுக்கு சம உரிமை, மரியாதை இல்லை: பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு..!

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். வெளிநாடு வாழ் மற்றும்…

தலைமை தேர்தல் அதிகாரி 2வது முறையாக தபாலில் அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக மீண்டும் மறுப்பு

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி சாகு 2வது முறையாக தபாலில் அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரிமோட் வாக்கு எந்திரம் குறித்த விளக்க கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதால் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. Source link

எடப்பாடி பழனிசாமி கடிதத்தை திருப்பி அனுப்பிய நிலையில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கால கட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட…

நேபாள பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.  5 கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தகால் என்ற பிரசண்டா கூட்டணியில் இருந்து வௌியேறினார். பின்னர் சிபிஎன்- யுஎம்எல் கட்சி பிரசண்டாவுக்கு ஆதரவு தருவதாக கூறியது. இதையடுத்து  நேபாள புதிய பிரதமராக பிரசண்டா பதவி ஏற்றார். இந்நிலையில்,  பிரதமர் பிரசண்டா வரும் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு…

தேர்தல் ஆணைய கடிதத்தை திருப்பி அனுப்பிய இபிஎஸ் தனிக்கட்சி தொடங்கலாம்: வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சாவூர்: தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பியதால், இபிஎஸ் தனி கட்சி தொடங்கலாம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.தஞ்சாவூரில் ஓபிஎஸ் அணி ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணங்களின்படி, தமிழக தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதை திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை திருப்பி அனுப்பியதால், இபிஎஸ் அதிமுகவை…

1 41 42 43 44 45 161