Browsing: அரசியல்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும்: மமக தலைவர் ஜவாஹிருல்லா உறுதி

தாம்பரம்: தமிழகத்தில் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என நேற்று தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார். சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் பிப்ரவரி 19ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து,…

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க குழு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் வழிமுறைகள் உருவாக்க, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றேன். கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் குழு…

மெரினாவில் ஜல்லிக்கட்டு: அனுமதி கோரி கமல் மனு

சென்னை: சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் நேற்று, நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதத்தை வைத்து அரசியல்…

தமிழ்நாடு என்பது வரலாறு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயர்: ஆளுநர் ரவிக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயர் குறித்து பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு என்பது வரலாறு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 1963ல் நேரு பிரதமராக இருந்த போது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய அண்ணா கோரினார். பெயர் மாற்றம் மூலம் என்ன கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள்.…

உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடக்கிறது அதிமுகவை கைப்பற்றுவது யார்? தொண்டர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: அதிமுகவை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடக்கிறது. விரைவில் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக பல பிரிவுகளாக சிதறி கிடக்கிறது. இதில் முக்கியமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியினரும் தற்போது அதிமுக எங்களுக்குத்தான் என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம்…

எடப்பாடியின் பதவி வெறிக்காக பலியாக்கப்படும் அதிமுக: உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி என்ற தனிமனிதனின் சுயநல பதவி வெறிக்காக அதிமுக என்ற பாரம்பரிய கட்சி பலியாக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ரஞ்சித் குமார் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோர் வாதத்தில்,‘‘அதிமுகவை பொறுத்தமட்டில் பொதுக்குழுவை…

என்எல்சியை வெளியேற்ற கோரி இரண்டு நாள் நடைபயணம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி 2 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழிந்துபோகும். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்த…

தமிழ்நாடு பெயர் மாற்றம் விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை திரும்ப பெற வேண்டும்: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு பெயர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்து விஷமத்தனமானவை. கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பு…

 ஆளுநருக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்துக்கு சூட்டப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த உயிர்த் தியாகம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் முக்கிய இடம் உண்டு. பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது ஆரிய சார்பு கருத்துகளை பரப்பும் விதமாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல. Source link

சொல்லிட்டாங்க…

நாட்டின் செல்வங்கள் அனைத்தும் 200 அல்லது 300 பேரிடமே உள்ளது. இதுதான் மோடி ஆட்சியின் உண்மையான நிலை. :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திதிராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு எந்த அருகதையும் இல்லை. :- மதிமுக பொதுச் செயலாளர் வைகோநாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி என்பது மிகவும் டேஞ்சரான…

1 39 40 41 42 43 161