சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்துக்கு சூட்டப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த உயிர்த் தியாகம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் முக்கிய இடம் உண்டு. பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது ஆரிய சார்பு கருத்துகளை பரப்பும் விதமாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல.
ஆளுநருக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
Share
