Browsing: அரசியல்

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையதின் முயற்சிக்கு வைகோ கண்டனம்

சென்னை: தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையதின் முயற்சிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய உணவுப்  பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள அறிவிக்கை  மூலம் இந்தி மொழியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்து உள்ளது.தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம், கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனம்,கேரளாவின் மில்மா பால் நிறுவனம் உள்ளிட்ட பால்…

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.இதையடுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது…

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாட்டில் தயிரை தாஹி என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்த தவறு அல்ல; திட்டமிடப்பட்ட இந்தி திணிப்பு. – பாமக நிறுவனர் ராமதாஸ்* ராகுல் காந்தியின் ஜனநாயக நடவடிக்கையை முடக்க மோடி செய்த சர்வாதிகார அராஜகத்திற்கு உலகம் முழுவதுமே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* சரியான தகவல்தான் ஜனநாயகத்துக்கான உயிர் சுவாசம். தற்போது, போலி தகவல்களும் சமமான வேகத்தில் பரவக்கூடிய சவால் உருவாகியுள்ளது. – ஜனாதிபதி திரவுபதி முர்மு* ஒரு குடும்பத்தில்…

ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா

கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக்கு பலமான கட்சி என்ற பெருமை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு போட்டியாக பாஜ தலைவர் எடியூரப்பா பாஜ கட்சியை மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமையை பெற்றார். அதனால் காங்கிரஸ்-பாஜ இரண்டு தேசிய கட்சிகளுமே கர்நாடகாவின் பிரதான கட்சிகளாக பார்க்கப்படுகிறது. அதே போல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. கடந்த 2018ல்  நடந்த…

நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ராகுல் காந்தி பதவி பறிப்பு, அதானி விவகாரம் குறித்து நாடு முழுவதும் ஒரு மாதகால தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ராகுல் காந்திக்கு ஆதராகவும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் கடந்த 26ம் தேதி அனைத்து…

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!

புதுடெல்லி: ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதலே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முடங்கியுள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை…

சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!

சென்னை: சென்னையில் சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது எடப்பாடி பழனிசாமியும் , ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து அவை நடவடிக்கையில் பங்கேற்று வந்தனர். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை நேற்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

பதவி பறிபோக காரணமான கோலாரில் ஏப்.5ல் ‘சத்தியமேவ ஜெயதே’ ராகுல் பிரசாரம் தொடக்கம்

கோலார்: எம்பி பதவி பறிபோக காரணமாக அமைந்த கோலாரில் மீண்டும் தனது பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்குகிறார்.  மக்களவைக்கு கடந்த 2019ம் ஆண்டு பொது தேர்தல் நடந்தபோது, கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கே.எச்.முனியப்பாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி பங்கேற்று   வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தலைமறைவாகி இருக்கும் லலித்மோடி, நீரவ்மோடி ஆகியோரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம்…

சொல்லிட்டாங்க…

* இன்னும் அதிக தேர்தல்களில் நாம் வெற்றி பெறும்போது, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மேலும் தீவிரமடையும். – பிரதமர் மோடி* வங்கிகளின் முதல் பொறுப்பு மக்களின் பணத்தை பாதுகாப்பது. அடுத்ததாக, சொத்துகளை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி திரவுபதி முர்மு * 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. – ஒன்றிய அமைச்சர் அமித்ஷா* வைக்கம் நினைவுகளை இந்தியா முழுவதும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. – தமிழக…

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை விதிக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. Source link