வெளிநடப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: ஒவ்வொரு முறையும் அதிமுகவை குறை கூறுகிறார்
சென்னை: சட்டப்பேரவையில் தினமும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரை வைத்து அதிமுகவை குறை சொல்லி பேச வைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் வெளியேற்றப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை விபத்து, மதுரை சித்திரை திருவிழா விபத்து போன்றவற்றுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே காரணம் என கூறி வெளிநடப்பு செய்தோம். நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வபெருந்தகை வேண்டுமென்றே திட்டமிட்டு, 1992ம் ஆண்டு…