Browsing: அரசியல்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்

திருச்சி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போட்டதில் ஈடுபட்டுள்ளனர்.சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்து வரும் சத்தியாகிரக போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றுள்ளார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சத்தியாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்திக்கு எதிராக அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். Source link

ராகுல் காந்தி விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

பல்லாவரம்: பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பம்மலில் நேற்று முன்தினம் மாலை பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பம்மல் நகர தெற்கு பகுதி திமுக செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவருமான வே.கருணாநிதி தலைமை தாங்கினார். பம்மல் 6வது வட்டச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். இதில், டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில், ‘‘மோடி பற்றி அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது…

ராகுல்காந்தி தகுதி நீக்கம் நியாயமற்றது: சரத்குமார் கண்டனம்

சென்னை:  சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:   பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்களை பற்றி தவறுதலாக பேசியதாக தெரிவித்து, குஜராத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்ததில், சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் ஜாமீன் வழங்கி தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது. நாடாளுமன்றத்தில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி, விசாரணை நடத்தி…

சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

மதுரை  : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட  வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு, உச்சநீதிமன்றம தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்…

அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடியின் கண்களில் பயம் தெரிந்தது: தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல்காந்தி பேட்டி!

டெல்லி : நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பேசக்கூடாது என்பதற்காகவே தன்னை தகுதி நீக்கம் செய்து இருப்பதாகவும் இது போன்ற செயல்களை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டேன் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து முதன்முறையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசியதாவது,’இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. நான் ஒரே ஒரு கேள்வி தான் எழுப்பினேன்..…

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 124 முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 124 முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 124 தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். Source link

கூட்டணி குறித்து கேட்காதீங்க… அது மேலிடம் பார்த்துக்கும்… அண்ணாமலை கப்சிப்

அவனியாபுரம்: கூட்டணி குறித்து கேள்விக்கு பாஜ மேலிடம் பார்த்து கொள்வார்கள் என்று கூறி அண்ணாமலை கப்சிப் என அடங்கினார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், மதுரை விமான நிலையத்தில் நேற்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரை  டெல்லியில் சந்தித்தேன். கடந்த ஒரு மாதத்தில் 2, 3 முறை கர்நாடக தேர்தல் தொடர்பாக…

ராகுல் பதவி பறிப்பு அராஜக நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கண்டனம்

நாகப்பட்டினம்: மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டனை விதித்த நிலையில், அவரை எம்பி பதவியிலிருந்து நீக்குவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார். இது இந்திய ஜனநாயகத்தை பாழ்படுத்தும் மற்றொரு அராஜக நடவடிக்கையாகும். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் இப்படி ஒரு தீர்ப்பு  வந்திருப்பதும், உடனடியாக ராகுல்காந்தி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த நிகழ்வை ஜனநாயக சக்திகள் சாதாரணமாக கடந்து போகாமல்,…

வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்

சென்னை: ‘‘வெடி விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கே. எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். 17 பேர் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். முறையான அனுமதி பெற்றிருந்தாலும் பட்டாசு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு…

ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

சென்னை: மோடி குறித்த சர்ச்சைகருத்து தெரிவித்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராகுல், இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் அதிக சோதனை நேரங்களையும். நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும்…

1 3 4 5 6 7 161