Browsing: அரசியல்

ஓபிஎஸ்சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி – Dinakaran

நாகப்பட்டினம்: ‘ஓபிஎஸ்சுக்கு ஆதரவா’ என்பது குறித்து சசிகலா பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று வந்த சசிகலாவை அதிமுக ஓபிஎஸ் அணி நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். சிறிது நேரம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் சசிகலா ஓய்வெடுத்தார். இதன்பின்னர் காரில் ஏறி திருவாரூர் சென்றார். அப்போது சசிகலா அளித்த பேட்டி: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டசபை என்பது மக்கள்…

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்: நாகையில் மோடி உருவபொம்மை எரிப்பு; தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது

கும்பகோணம்: ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினார். நாகையில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிலும்…

‘மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது’ …ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தற்போதைக்கு என் தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள். பாஜகவை வர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். Source link

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது… மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேறியது. ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு பேசி இருந்தார். மேலும்,’ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள்…

பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாநகர எல்லைக்குட்பட்ட குருவிமலை கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவர்களுக்கு இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடி ஆலைகளை கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் தனி விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சமத்துவ மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த சித்திரைவேல், புதுவை மாநிலச் செயலாளராக செயல்பட்டு வந்த ராமச்சந்திரன், புதுவை மாநில துணைச் செயலாளராக செயல்பட்டு வந்த செந்தில் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநில, மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் தங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் வரை தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.   இவ்வாறு…

அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டி

தஞ்சாவூர்: அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு வெளியேறு என கும்பகோணம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.   Source link

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்க : தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!

சென்னை : ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்கும் அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே பெண் கூலித்தொழிலாளர்களுக்கு (ரூ.297) வழங்கப்படுவதாகவும், நகர்ப்பகுதிகளில் 65% மட்டுமே (ரூ.576/375) வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே…

கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்! : தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க  கொண்டாடுவோம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுகவை வலுமைப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரம், முகாம்கள் அமைப்பதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தீர்மானம் :தமிழினத் தலைவர் கலைஞரின்…

1 4 5 6 7 8 161