Browsing: அரசியல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 7-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 07.04.2023 – வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம்…

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது

சென்னை: திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட திமுக பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ம் தேதியன்று தொடங்கி ஜூன் 3ம் தேதி கலைஞர்…

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம்..!!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்திருக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர்; ஒட்டுமொத்த வாக்குவங்கியில் 5 சதவீதம் தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளில் உள்ள தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுப்பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஏற்கனவே சில…

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மக்கள் துரத்தி அடிக்கும் நிலை ஏற்படும்: திருமாவளவன் எம்பி பேட்டி

கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூரில் நேற்று அளித்த பேட்டி: மோடி ஆட்சியில் அதானி என்ற தனி நபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கி போடுவது தேச விரோத செயலாகும். எதிர்க்கட்சியின் கோரிக்கையின் மீது மோடி அரசு நியாயமான நடவடிக்கை மேற்கொண்டு இருக்குமேயானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும். வரும் ஏப்ரல் 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜனநாயகம் காப்போம் என்ற அறப்போராட்டத்திலும் அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து உறுதிமொழி…

சொல்லிட்டாங்க…

* காஸ் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனினும் உங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது. – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்* தமிழ்நாட்டை தவிர, எல்லா மாநிலத்திலும் பேச்சு சாமர்த்தியத்தால் மோடியால், மக்களை ஏமாற்ற முடிகிறது. – விசிக தலைவர் திருமாவளவன்.* ஒருங்கிணைந்த அதிமுக, ஒருங்கிணையாத அதிமுக என்று நான் ஏன் சொல்ல வேண்டும். அது எனது வேலை கிடையாது. – பாஜ தலைவர் அண்ணாமலை.* வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து…

தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ போட்டி?: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று அளித்த  பேட்டி: அதிமுக, பாஜக கூட்டணி ரொம்ப வலுவாக உள்ளது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். எங்களுடைய மாநில தலைவரும் சொல்லியிருக்கிறார். நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். எங்களுடைய கூட்டணி கட்சி தலைவரான அதிமுக தலைவர்களும் இதை சொல்லியிருக்கிறார்கள். எங்களுடைய கூட்டணியானது மிகவும் வலிமையான கூட்டணியாக இருக்கிறது. இந்த கூட்டணியானது தொடர்ந்து இருக்கும். எங்களுடைய நிர்வாகிகள் கூட்டங்களில் சில விஷயங்களை பேசுவது வழக்கம். அண்ணாமலையின் கருத்து…

அகில இந்திய அளவில் கட்சிகளை இணைத்து சனாதன சக்திகளை அழிக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபடவேண்டும்: தொல்.திருமாவளவன் பேச்சு

பெரம்பூர்: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை புளியந்தோப்பில், ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்’’ என்ற தலைப்பில் 73(அ) வட்ட திமுக செயலாளர் கே.சுரேஷ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்தொல்.திருமாவளவன்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்.குமார், கலாநிதி வீராசாமி எம்.பி, திருவிக.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் கலந்து…

சிறப்பாக பணியாற்றும் தமிழ்நாடு போலீஸ்: சரத்குமார் பாராட்டு

தூத்துக்குடி: சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: பொன்னியின்செல்வன் 2வது பாகம் எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு தியேட்டரில் நரிக்குறவர் இனத்தை  சேர்ந்தவர்களை அனுமதிக்க மறுத்து இருப்பது, மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த காலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது மனவேதனையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது எதிர்க்கட்சியின் வாதமாக இருக்கும்.…

ஒரே நாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை பாஜ அரசு கையாளுகிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

திருச்சி: ‘ஒரே நாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை கையாளும் வகையில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டு வருகிறது’ என்று முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளார். அதானி, அம்பானி குடும்பத்துக்கு மிகுந்த விசுவாசியாகவும், ஏஜென்டாகவும் மோடி செயல்படுகிறார்.…

தகவல் தொழில்நுட்ப பிரிவை தொடர்ந்து பாஜ கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார்: மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி

சென்னை: பாஜ கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் பொன்.கந்தசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால் மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார்.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்த பிளவுகளை அதிமுக சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் கூட்டணி கட்சியான பாஜவின் மூத்த நிர்வாகிகள்…

1 2 3 161