Browsing: அரசியல்

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவமும், கொலையும் அதிகரித்துள்ளது. . தூத்துக்குடி வழக்கறிஞர், அரியலூர் வழக்கறிஞர், தருமபுரி வழக்கறிஞர் ஆகியோர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இப்போது சென்னை பெருங்குடி வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். Source link

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சம்பந்தபட்ட பேராசிரியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிது. தமிழக அரசு விரைந்து விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க…

பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பால் வழங்க மறுத்து உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டமும், அம்பத்தூர் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் தான் ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கும், குறித்த காலத்தில் கிடைக்காததற்கும் காரணம் என்று கூறப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமலும், உரிய காலத்திலும், அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட வேண்டியது கட்டாயம். எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு ஆவின்…

பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு

சென்னை: பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவைகளை குறித்து பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆளும் கட்சியான பாஜ முடக்குகிறது என முகுல் வாஸ்னிக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்நிக் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது ஆளும் கட்சியான பாஜ தான். பணவீக்கம், விலைவாசி உயர்வு பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை குறித்து பேசாமல் தவிர்க்கின்றனர்.ராகுல்…

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தெரியப்படுத்தியது அதிமுக: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு..!

சென்னை: பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தெரியப்படுத்தியது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். இபிஎஸ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வானார். பொதுச்செயலாளர் தேர்வு ஆனதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். அதிமுக…

அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம்: டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை. இது நீண்ட நெடிய சட்டப் போராட்டம். இதுவரை 2,3 ரவுண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வழக்கில் வெற்றி பெற்றதன் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது. பண பலம்,…

கலாஷேத்ராவில் பாலியல் புகார்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

சென்னை: சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி குறித்து சட்டப்பேரவையில் விசிக கட்சி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய கட்சி உறுப்பினர்கள், ‘கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு நிறுவனங்களில் இது போன்று தொடர்ந்து நடந்து வருகிறது. கலாஷேத்ராவில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் தலையிட்டு மாணவிகளுக்கு நீதி…

எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் திடீர் வாழ்த்து: நடந்தது என்ன?

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் செல்போனில் வாழ்த்து தெரிவித்தார். திடீரென்று அவர் வாழ்த்து தெரிவித்ததன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர், அஜித் குமார். அவரது தந்தை பி.சுப்பிரமணியம் (85), கடந்த 24ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஈசிஆர் ரோட்டிலுள்ள வீட்டில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.…

ஆரணி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு அதிமுக தலைவர் பதவி பறிப்பு

ஆரணி:  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம்  செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 முதல் சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த  ஒன்றிய அவைத்தலைவரான சம்பத் பட்டு கூட்டுறவு சங்க தலைவராகவும், துணை தலைவராக சுந்தரமூர்த்தி மற்றும்  நிர்வாக குழு உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர். இச்சங்கத்தில் 1450க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர்.  ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது  ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட…

பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது இதைதான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்திருந்தார். Source link