Browsing: அரசியல்

ஜி.கே.வாசன் வலியுறுத்தல் பாலியல் தொல்லை அளிப்பவர்களை தூக்கிலிட வேண்டும்

சென்னை: தமாகா சார்பில் மே தின விழா, சென்னை சேப்பாக்கத்தில் கொண்டாடப்பட்டது. மாநில துணை தலைவர் விடியல் சேகர் தலைமை வகித்தார். தொழிற்சங்க பொது செயலாளர் கே.ஜி.ஆர். மூர்த்தி வரவேற்றார். தொழிற்சங்க தலைவர் இளவரி தொடக்க உரையாற்றினார். விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசியதாவது:  சமீபகாலமாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் விசாரணை என்ற பெயரில் வழக்கை நீட்டிக்கக்கூடாது. இவர்தான் குற்றவாளி என முதல் நிலையில் அறிந்த…

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பு திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் போட்டியா? பணத்தை வாரி வழங்குவதால் கட்சித்தலைமை விசாரணை

சென்னை: திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க பணத்தை வாரி வழங்கி வருவதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால் கட்சித் தலைமை விசாரணையை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். அவர் ஒருவர்தான் மக்களவை உறுப்பினர் என்பதால், மக்களவை கட்சித் தலைவராகவே அவரை…

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பு; திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் போட்டியா?.. பணத்தை வாரி வழங்குவதால் கட்சித் தலைமை விசாரணை

சென்னை: திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் மகன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணத்தை வாரி வழங்கி வருவதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால் கட்சித் தலைமை விசாரணையை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். அவர் ஒருவர்தான் மக்களவை என்பதால், மக்களவை கட்சித் தலைவராகவே அவரை கட்சித் தலைமை…

தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திமுக; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக. 1957-ம் ஆண்டு திமுக முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியது. முதல் தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1962 தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று…

சொல்லிட்டாங்க…

என் தந்தை பாஜவை கண்மூடித்தனமாக நம்பினார். அதனால்தான் அவரை ஏமாற்றினர். ஆனால் நான் பாரதிய ஜனதா விஷயத்தில் உஷாராக இருக்கிறேன். என்னை ஏமாற்ற முடியாது. :- மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேகிராமங்கள் நகரமயமாக்கப்படுகின்றன. இதனால் புதிய பிரச்னைகள் உருவாகின்றன. இதை கையாள புதிய கொள்கைகள் வகுக்க வேண்டும். :- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார். ஒரு சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. :- தமிழக காங்கிரஸ் தலைவர்…

தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கஞ்சா, அபின், போதை மாத்திரைகள், கேட்டமைன், எல்எஸ்டி ஆகியவையும் சென்னையில் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. வெளி மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் படிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் வணிகத்தைத் தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். திடீர் சோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க…

உள்கட்சி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்: ஒற்றை தலைமை குறித்தும் முக்கிய முடிவு எடுக்க திட்டம்

சென்னை: உள்கட்சி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், ஒற்றை தலைமையின் கீழ் கட்சியை கொண்டுவருவது உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. அதிமுக கட்சியில் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். கடைசியாக 9.1.2021ம் ஆண்டு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அப்போதைய அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. கொரோனா காரணமாக 2022ம்…

9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் வெயில் கொதித்துக்கொண்டிருக்கும் சூழலில் பள்ளிகளை மே 13-ம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன?அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மின் விசிறிகள் இல்லை. 3 வயது குழந்தைகளால் 8 மணி நேரம் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நடத்தப்படவுள்ளன. அதில் கூட நியாயம் உள்ளது. ஆனால், 1…

சொல்லிட்டாங்க…

திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவடையவே இன்னும் ஒருவாரம் இருக்கிறது. 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது திமுக அரசு. :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். :- பிரதமர் மோடிஒரே குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் இருந்தால் ஒற்றுமை இருக்காது. அதேபோல் தான் கட்சியிலும். :- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபுதுவையில் புதிதாக தொழில் துவங்க முன்வருவோருக்கு…

ராகிங்கால் தற்கொலை மாணவி குடும்பத்துக்கு ரூ.1 ேகாடி இழப்பீடு: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ‘‘செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் ராகிங் கொடுமை தாங்க முடியாத கவிப்பிரியா கடந்த 28-ஆம் தேதி வியாழக்கிழமை தமது தந்தையை தொடர்பு கொண்டு, தமக்கு இழைக்கப்படும் கொடுமை குறித்து கூறியதுடன், விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்து விடுவதாக கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கவிப்பிரியா அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. மேலும் மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு…