கேள்வி நேரம் இல்லாமல் இன்று சட்டப்பேரவை நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். Source link