Browsing: அரசியல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று தாக்கல்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. அப்போது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். Source link

வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு சாடல்!!

சென்னை : வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் ‘நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வெறுப்புதான். வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இதனை அரசியலில் – தேர்தலில் அவர்களுக்கு எதிர்களத்தில் நிற்பவர்கள் மட்டும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அதற்குத் தேர்தல் – அரசியல் உள்நோக்கம் கற்பிப்பார்கள்.இப்படிச் சொல்பவர்கள்…

நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!!

சென்னை: நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ‘தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு…

தமிழக அரசின் உதவிக்கு இலங்கை மக்கள் வரவேற்பு: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

மீனம்பாக்கம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் அண்ணாமலை சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி; இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை டாலர். அதற்கு தீர்வு காண, நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒன்றரை மில்லியன் டாலர் உதவியாக சென்றிருக்கிறது. அவசர கால உதவியாக…

திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!!

சென்னை : திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,’கடந்த ஏப்ரல் 29 அன்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்த அவையில் நேரமில்லா நேரத்தில் பேசியபோது, திருவண்ணாமலை சம்பவம் குறித்து இந்த அவையினுடைய கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்து நான் பேசியபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடற்கூராய்வு முடிந்ததற்குப்பின்பு, இந்த அவைக்கு அதனை நான்…

பாஜ.வுக்கு ஓடிய குஜராத் காங். எம்எல்ஏ

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  மூன்று முறை எம்எல்ஏவான அஸ்வின் கோத்வால் ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்தார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பழங்குடியினர் தலைவரான அஸ்வினி கோத்வால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர், சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கேத்பிரம்மா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2007, 2012 மற்றும் 2017ம் ஆண்டுகள் என  மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில்,…

சொல்லிட்டாங்க…

* உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். நெருக்கடிக்கு தீர்வு காண இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். – பிரதமர் மோடி* எல்ஐசியின் மதிப்பை குறைத்து, பங்கு விலையை அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.* மருத்துவ துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணம் அரசு மருத்துவர்கள்தான். அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். -…

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு உதவும் அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை வாழ் மக்களுக்கு உதவுவதற்காக, இலங்கைக்கு உதவ அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அனுப்பிவைக்க ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழக மக்களால் வழங்கப்படும் இந்த உதவிகள், பாகுபாடு இன்றி இலங்கை நாட்டிற்கு அளிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட,…

ஓபிஎஸ் பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய பொதுக்கூட்டத்தில், அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மே தினத்தையொட்டி, அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், சென்னை புரசைவாக்கத்தில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. உழைப்பவரே உயர்ந்தவர் என்றுதான் எம்ஜிஆர் கையெழுத்து போடுவார். குருவிக்கு கூட கூடு…

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர் அல்லாதோருக்கும் உதவும் அரசாக திமுக அரசு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர்  இரா.ராஜிவ்காந்தி செய்திருந்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுக் கட்சியிலிருந்து இன்றைக்கு விலகி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் – இல்லை என்று சொன்னாலும், தமிழர்களுக்காக -…