ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. கோவிந்தசாமி நகர் மக்களுக்கு மயிலாப்பூர், மந்தைவெளியில் வீடுகள் : முதல்வர் அறிவிப்பு!!
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று அதிகாரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றபோது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் உடலில்…