Browsing: அரசியல்

ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதல் அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரும் நல்லதொரு முன்னுதாரணத்தை தொடங்கி வைத்துள்ளனர். அதிகமான மக்கள் அடிக்கடி வந்து செல்லும் மின்வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், உணவுப்பொருள் வழங்கல் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போன்ற அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கினால் மக்களுக்கு பேருதவியாக…

ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் கையெடுத்து இட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுநர்…

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சிக்கலில் ஆளுநரின் அதிகாரம் : ஆளுநரை 'அம்பலப்படுத்திய' உச்சநீதிமன்றம்!

சென்னை : ஆளுநரை ‘அம்பலப்படுத்திய’ உச்சநீதிமன்றம்! என்ற தலைப்பில் முரசொலி முக்கியமான தலையங்கம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், ‘இந்திய நீதித்துறையின் அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமானது ஆளுநர் என்றால் யார் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் பிறகாவது புரிய வேண்டியவர்களுக்கு அது புரிய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவருக்கு கடந்த மாதம் பிணையில் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘அவரை…

4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்

சென்னை:  நான்கு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசினார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது:செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. நாளுக்குநாள் மக்கள் தொகை…

சொல்லிட்டாங்க…

கடந்த 2014-15ம் நிதியாண்டில் இருந்து 2020-21ம் நிதியாண்டு வரை பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு 250 சதவீதம் அதிகரித்துள்ளது.- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திபுதுச்சேரியில் எல்லா பெயர் பலகைகளும் தமிழில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது பாரதிதாசனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதை, கடமை.- புதுச்சேரி ஆளுநர் தமிழிசைடெல்லியில் பிரதமர் உள்பட சில ஒன்றிய அமைச்சர்களை தனியாக சந்தித்து பேச திட்டமிட்டேன். அதற்கான சூழ்நிலை கிடைக்காததால் யாரையும் சந்தித்து பேசவில்லை.- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைஆன்லைன் சூதாட்டத்தை…

‘ஒரு மாத சம்பளம் தர தயார்’.. இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கோரிய தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்!!

சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள்…

துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சஸ்பெண்ட்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

சென்னை: துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்டச் செயலாளர்களை வைகோ சஸ்பெண்ட் செய்துள்ளார். சில மாதங்களுக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ அமர்த்தப்பட்டார். பிறகு அப்பொறுப்பை மேலும் வலுப்படுத்தி, `தலைமைக் கழகச் செயலாளர்’ என்று பெயர்சூட்டி, அந்தப் பொறுப்புக்கு பொதுக்குழு ஒப்புதலும் பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு அக்கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…

சிறையில் இருந்த தங்கமணியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த உடன், உரிய விசாரணை நடத்தப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

சென்னை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரது மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த    26-4-2022 அன்று வழக்குப் பதிவு…

திமுக மாநகராட்சி வார்டு கழக தேர்தல்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட வார்டு கழகத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும், நாளையும் வேட்புமனுக்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: திமுகவின் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு கழகத் தேர்தல் மே 7ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டியிருப்பதால், தேர்தலில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள், மாவட்டக் கழகத்திலோ அல்லது பகுதிக் கழகத்திலோ வேட்புமனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதனை முறையாக பூர்த்தி செய்து ஏப்ரல் 29 மற்றும்…

மபி எதிர்க்கட்சி தலைவர் கமல்நாத் பதவி விலகல்

போபால்: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பாஜ கவிழ்த்தது. தற்போது அங்கு, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கையான `ஒருவருக்கு ஒரு பதவி’ என்பதின் அடிப்படையில், மத்திய பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், மாநில காங்கிரஸ் தலைவர் என இரு வேறுபதவிகளை வகித்து வந்த கமல்நாத், நேற்று தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக மட்டும் நீடிக்க…