Browsing: அரசியல்

பொதுக்குழு நாளில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடந்த கலவரம் தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்படி, ராயப்பேட்டை போலீசார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக எடப்பாடி…

தமிழக மீனவர்கள் விடுதலைக்கு ஒன்றியஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலைக்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜூலை 1ம் தேதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 12 பேரை வேதாரண்யம் அருகே, எல்லை தாண்டி வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஜூலை 4ம் தேதி ராமேஸ்வரத்தில்…

போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம்தேதி போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம் தேதி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த ஆய்வில் 9% மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் இந்த எண்ணிக்கை 10 விழுக்காட்டை தாண்டியிருப்பது உறுதியாகியிருக்கிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று…

குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி :ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கடிதம்!!

புதுடெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை…

சொல்லிட்டாங்க…

* பிரதமரின் அக்னி பாதை என்ற புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து; இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்து. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* மகாராஷ்டிரா அரசையும் ஷிண்டே உட்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் காப்பாற்ற ஒன்றிய பாஜ அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம் சிவசேனாவை அழிக்கப் பார்க்கிறது. – சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்* ஒரு மரத்திற்கு 5 அலகு மின்சாரம் என்பது மிகவும் குறைவுதான். எனினும், மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை…

பிரச்னையை தீர்க்க டெல்லிக்கு விரைவு சட்டீஸ்கர் காங்.கில் உட்பூசல் முதல்வர்-அமைச்சர் மோதல்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பகேலுக்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் தற்போது ராஜஸ்தான், சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் தனித்து ஆட்சி நடத்துகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து நடத்திய கூட்டணி ஆட்சியை பாஜ சமீபத்தில் கவிழ்த்து விட்டது. இந்நிலையில், சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகலுக்கும், சுகாதார அமைச்சர் சிங் தேவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில்…

டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் ஈபிஎஸ்

சென்னை; டெல்லியில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்க ஈபிஎஸ் டெல்லி சென்றிருந்தார். Source link

அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் ஓபிஎஸ்

சென்னை: அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். அதிமுகவில் தலைமைப் போட்டி நீடிக்கும் நிலையில் 14 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதாக ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. Source link

அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. Source link

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் திட்டம்

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்னைகளை டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக அவரே அறிவித்தார்.இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும்…

1 118 119 120 121 122 161