Browsing: அரசியல்

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம்: செல்லூர் ராஜூ

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் எனவும் கூறினார். Source link

அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும். காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். Source link

அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது: சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

5 நாள் பயணமாக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி; பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் குறித்து புகார் அளிக்க திட்டம்: புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கிறார்

சென்னை: எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசி ஓ.பன்னீர்செல்வம் பற்றி புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரமும் சென்றார். டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 25ம் தேதி புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.மேலும் பிரதமர் மோடியை…

சொல்லிட்டாங்க

* ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.- பிரதமர் மோடி * மோடி அரசின் 8 ஆண்டு கொடுமைகளை கண்டித்து, ஆகஸ்ட் 25 முதல் 31 வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* வரும் சட்டமன்ற பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். நான் வென்ற தொகுதியை மகன் விஜயேந்திராவுக்கு விட்டுக் கொடுக்கிறேன்.- கர்நாடக முன்னாள் முதல்வர்…

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ரவீந்திரநாத் எம்.பி. கடிதம்

சென்னை: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ரவீந்திரநாத் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில்; தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். Source link

ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்முவுக்கு சசிகலா வாழ்த்து

சென்னை: ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்முவுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் இந்திய திருநாட்டின் 15வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள மாண்புமிகு திரவுபதி முர்மு அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நம் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதியாகவும் திரவுபதி முர்மு அவர்கள் இந்த உயர்ந்த பதவியை அலங்கரிப்பதில், நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். சகோதரி திரவுபதி முர்மு அவர்கள் ஏழை எளிய மக்களின்…

கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 1,000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காங். கட்சியை சேர்ந்த 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Source link

சொல்லிட்டாங்க…

சர்வாதிகாரியாக மாற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை அழிக்க துடிக்கிறார் பிரதமர் மோடி. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்2024ம் ஆண்டு மக்கள் கட்டளையால் ஆட்சியில் இருந்து பாஜவை வெளியேற்ற வேண்டும். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். :- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிபொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழைகளை பாதிக்கும் தயிர், நெய் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும். :- பாமக நிறுவனர் ராமதாஸ்மோடியின் தொலைநோக்கு பார்வையால் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்…

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென நேரில் சந்தித்து பேசினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணை  தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முன்னாள் மேயர் கார்த்தியாயினி,  முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. சந்திப்பின்போது…

1 119 120 121 122 123 161