Browsing: அரசியல்

ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் சென்ற அண்ணாமலை  செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினர் கொடியுடன் அணிவகுத்து பேரணி சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு கும்பிடு போட்டபடி அண்ணாமலை கடந்து சென்றார். Source link

மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்டதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சரவணனை, அண்ணாமலை நீக்கியுள்ளார். Source link

ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை கடுமையாக எதிர்க்க வேண்டும் என காரைக்குடியில் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்வு என்ற எண்ணமே தவறானது. ஒரே நாடுதான் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு நாட்டுக்குள் பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடக்கூடாது. அதனை பறிக்கும் முயற்சியில் இறங்க கூடாது. நீட்,…

பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற அனுமதி மறுப்பது அதிர்ச்சியாக உள்ளது: அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி,பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கலெக்டருடன் மாநில துணைத் தலைவர் சம்பத், சுதா வரதராஜிவை நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். தற்போது அவர், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது.…

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், 10ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு 40ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு துறைகளுக்கு 6 வகையான பணிகளுக்கு 92 பேர் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கி விட்ட நிலையில், போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு இந்த முறையும் 34 ஆகவே நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2006 முதல் 2022ம் ஆண்டு வரை 17 முறை முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டிருக்க…

தியாகி மனைவிக்குப்பின் அடுத்த சந்ததியரை 2ம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தியாகிகளின் மனைவிக்கு பிறகு, அடுத்த சந்ததியரை இரண்டாம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தினம் நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில் தியாகிகளின் மனைவிக்குப்…

அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

நெல்லை: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளதாக நெல்லையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு  முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து…

பீகாரில் நிதிஷ்குமார் எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பேட்டி

மும்பை: பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், புதிய ஆட்சியை அமைத்த நிதிஷ்குமார் நாட்டின் அரசியல் அரங்கை பரபரப்பாக்கி உள்ளார். ‘அவர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார். பா.ஜனதா நெருக்கடியை  ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அவர் இதுபோன்ற முடிவை  எடுத்துள்ளார்’ என்று சரத்பவார் கூறியுள்ளார். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனே மாவட்டம் பாராமதியில் நிருபர்களிடம் கூறியதாவது: பிராந்திய கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை, பா.ஜனதா கட்சியை போன்றவை மட்டுமே நாட்டில் இருக்கும் என்று பா.ஜனதா…

ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலிறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி  வசூலித்து மோசடி செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களிடம்…

1 109 110 111 112 113 161