Browsing: அரசியல்

‘மீண்டும் ஒற்றுமையாக செயல்படுவோம்’ அதிமுகவில் இணைந்து செயல்பட சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, இன்று தேனி மாவட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். 3 முறை முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர்.…

தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?.. ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? என ஓ.பன்னிர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, ஓ.பன்னிர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு…

சொல்லிட்டாங்க…

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா நம்பர் 1 நாடாக மாறவே, ‘மேக் இந்தியா நம்பர் -1 திட்டம்’ தொடக்கம். :- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து, 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டுள்ளனர். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபீகாரில் பாஜவுடன் உறவை முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் வெளியேறியது, 2024 தேர்தலில் பெறும் எழுச்சியை உருவாக்கும். :- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய…

அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தனி நபருக்கோ, குழுவிற்கோ அல்லது குடும்பத்துக்கோ இயக்கத்தை கொண்டு  செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது என்று நல்ல  நீதி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:எம்ஜிஆர், ஜெயலலிதா…

எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி; எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம். பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஜூன் 23-ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஒருமனதாக…

அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தர்மத்தை நம்பினேன் நீதிமன்றங்களை நம்பினேன் அதிமுகவை உயிராக நேசிக்கும் கழகக்…

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; இரட்டை தலைமையே தொடரும்: உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!

சென்னை: ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டதாக கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து…

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மந்தமாக நகர்வதை பார்த்தால் வடகிழக்கு வருவ மழை ஆரம்பித்து முடிந்துவிடும் போல் உள்ளது. மேலும் இதனால் ஏற்கனவே இருந்த பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பாக தான் இருக்கும். கே.கே. நகர், அசோக் நகர், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், பகுதிகளில் மழைநீர் வடிகால்…

பந்திக்கு முந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாயுடன் படுப்பதுதான் ஓபிஎஸ் வேலை: ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை: பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாய் போட்டு படுத்துவிடுவதுதான் ஓபிஎஸ் வேலை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கி பேசினார். சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்து என்று ஓ.பன்னீர்செல்வம் குழு சென்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது, கட்சியிலும் அவர் கிடையாது. யாராவது ஒருவர் அழைக்கமாட்டார்களா…

மதுரை மாவட்ட பாஜ தலைவர் நீக்கம்

சென்னை: மதுரை மாவட்ட பாஜ தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை நகர், மாவட்ட தலைவர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என…

1 107 108 109 110 111 161