Browsing: அரசியல்

அதிமுக ஒன்றுபட வலியுறுத்தி அம்பையில் பரபரப்பு போஸ்டர்

அம்பை: அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தி அம்பையில் மாஜி நகராட்சி துணை சேர்மன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என வெளியான தீர்ப்பையடுத்து, மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் கட்சி அலுவலகத்தை நொறுக்கி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்ததோடு, சென்னை ஐகோர்ட்டின்…

அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எண்ணம்: ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி

மதுரை: அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும்  என்பது அதிமுக தொண்டர்களின் எண்ணம் என ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சாமானியரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அதிமுக. தொண்டர்களை உயர்ந்தவர்களாக நினைத்தவர் எம்.ஜி.ஆர். தலைமைக்கு உண்மையாக செயல்பட்டதால் பல்வேறு பதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா.  நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கட்சிக்குள் பிளவு இருந்தால் தொண்டர்கள் நம்பிக்கை இழப்பார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கட்சியில்…

எடப்பாடியை ஆதரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஓபிஎஸ்சிடம் வருவர்: வைத்திலிங்கம் நம்பிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் எம்எல்ஏ நேற்று வருகை தந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது. எடப்பாடி பழனிச்சாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அதிமுகவை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை…

தமிழகத்தில் பாஜ தொடர்ந்து அராஜக போக்கில் ஈடுபடுகிறது: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: தமிழகத்தில் பாஜ அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கே.பாலகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு தனது அறிக்கையை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளது. அதில், இச்சம்பவத்திற்கு காரணமான அப்போதைய கலெக்டர், ஐஜி, டிஐஜி, எஸ்பி, உள்பட 17 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, விசாரணைக்குழு அறிக்கையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ…

பெரியகுளம் அருகே பண்ணை வீட்டில் முக்கிய ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை

பெரியகுளம்: அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது; மீண்டும் பழைய நிலையே தொடர வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை சில ஆதரவாளர்கள் சந்தித்து பேசினார். நேற்று பெரியகுளம்…

காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு

இந்தூர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர்  நிதிஷ்குமார் கடந்த வாரம் வெளியேறினார். பின்னர் நிதிஷ் குமார் தலைமையில்  புதிய அரசு அமைந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘நான் வெளிநாட்டிற்குச் சென்றேன்.…

தமிழகத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை கன்னியாகுமரியில் ராகுல் பேசுகிறார்: தினேஷ் குண்டுராவ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில், கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொள்ள, கட்சிக்கு புத்துயிரூட்டவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை செப்டம்பர் 7ம்தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. இதுகுறித்து,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சத்தியமூர்த்திபவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தமிழக…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைந்து கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஜூன் 23ம்…

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு

சென்னை: ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் இரு தரப்பினருக்குள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்சுடன் இணங்கி போகலாம். அவரை கட்சியில் இணைத்து செயல்படுவோம். அடுத்த ஆண்டு பொதுக்குழு கூடும் போது நம்முடைய பலத்தை நிரூபித்து வெற்றி…

இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை இழந்தார் எடப்பாடி: லெட்டர்பேடில் இருந்தும் நீக்கினார்

சென்னை: நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக இடைச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி இழந்தார். அதேபோல தனது லெட்டர் பேடில் இருந்தும் அந்த பதவியை நீக்கிவிட்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது ‘என்று உத்தரவிட்டது.இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இருக்கும். இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியை எடப்பாடி தீர்ப்புக்கு பிறகு இழந்தார். …

1 106 107 108 109 110 161