Browsing: அரசியல்

மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: மார்ச் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 21-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. Source link

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற துணை நிற்க வேண்டும்: கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு துணை நிற்க வேண்டும் என்று கோவையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கோவை பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில் அதிமுக, பாஜ, உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 4 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா, நேற்று நடந்தது. அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது: மக்களின் அன்பை பெற்று, இன்று ஆட்சியில் இருக்கிறோம். இந்த…

2024 தேர்தலுக்கு முன் ஆளும் பாஜகவை சுற்றி வளைக்கும் எதிர்கட்சிகள்; 27 ஆண்டுக்கு பின் விஸ்வரூபம் எடுக்கும் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா: தேவகவுடா தொடங்கியதை மோடி அமல்படுத்துவாரா?

புதுடெல்லி: அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவை சுற்றிவளைக்கும் வகையில் 27 ஆண்டுக்கு பின்னர் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளதால் ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.  பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த கோரிக்கை வலியுறுத்தி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர…

சொல்லிட்டாங்க…

* தாய்மை அடைந்த பெண்ணுக்கு தலைமை பண்பு இயல்பாகவே வந்துவிடுகிறது. – இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு* காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எனக்கு கல்லறை தோண்டி வருகிறது. – பிரதமர் நரேந்திர மோடி* நியூயார்க், பாரிஸ் போன்ற பெரிய நகரங்களை விட டெல்லியில் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். – பாமக நிறுவனர் ராமதாஸ் Source…

நிதி பிரச்னையால் தள்ளி போகும் இலங்கை உள்ளாட்சி தேர்தல்

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியால்  மார்ச் 9ம்தேதி  தேர்தலை நடத்துவது கடினம் என்று  தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. தேர்தல் நடத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்குமாறு அரசு கருவூலத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்த நிதி ஒதுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி…

ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்?: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், வரும் சட்டசபை ேதர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பின்படி,…

சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஈரோடு: வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, ஈரோடு திருநகர் காலனியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, அவர் வடமாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், மிரட்டல்…

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கோவில்பட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை அதிகாரியாக இருந்தபோது செய்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவேன் என்று ஆர்.எஸ்.பாரதி பேசினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி சீண்டிப் பார்க்கிறார். இதை எடுத்து சொன்னால் மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர்.ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் ஊழல்…

வைகோவுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: இலங்கை தமிழர் உரிமைக்காக முக்கிய பங்காற்றியவர் வைகோ என பேட்டி

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சமீபத்தில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார். குறிப்பாக அந்த பேட்டியில் வைகோவை, பிரபாகரன் அழைக்கவில்லை போன்று திருமாவளவன் சொல்லியதாக மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று காலை…

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தங்க சாலை மணிக்கூண்டு அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், முத்தரசன் பேசியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய ஆளுநர் சூதாட்ட…

1 9 10 11 12 13 161