Browsing: செய்திகள்

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா எனக்கு ரூ.4,000 ஃபீஸ்!’ – விவசாயி புகாரால் மின் துறை பெண் அதிகாரி கைது | Anti-Corruption Police have arrested officer took a bribe to provide an electricity connection

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டணை இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால், அதுகுறித்து இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்திலிருந்த அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். அப்போது அங்கு மின் வணிக ஆய்வாளராக இருந்த ரேகா என்ற பெண் அதிகாரி, `கரண்ட் வேணும்னா கவர்மெண்ட்டுக்கு கட்ற…

பியானா வாத்ரே மோமின் 70 வயதில் எக்கோ பட நாயகியாகி இந்திய சினிமாவை ஈர்த்த கதை

கட்டுரை தகவல்எழுதியவர், சுதா ஜி திலக் 9 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்70 வயதில், பியானா வாத்ரே மோமின் வீட்டிலிருந்து வெகு தூரம் செல்ல துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார்.ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியரான இவர், வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள காரோ மலையில் நான்கு நாய்களை வளர்த்துக்கொண்டு, தன் பேரப்பிள்ளைகளை அன்புடன் பார்த்துக்கொண்டு, எங்கே அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாரோ – அங்கிருந்து திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக்…

டிரம்ப் கூறுவது போல் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? விக்ரம் மிஸ்ரி பதில்

பட மூலாதாரம், ANI9 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா தனது எண்ணெய் தேவைகளுக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கவில்லை என்றும், எதிர்காலத்திலும் அப்படிச் செய்யும் எண்ணம் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், விக்ரம் மிஸ்ரியிடம், ‘அமெரிக்கா கூறுவது போல், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா?’ என்று கேட்கப்பட்டது”இந்தியாவின் எரிசக்தி தேவையின் சுமார் 80–85% இறக்குமதியையே சார்ந்துள்ளது. எரிசக்தி விலைகள் உயர்ந்து பணவீக்கம் ஏற்படக்கூடும் என்பதில் அரசு கவனம் செலுத்த…

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஸ்மாவுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உசேன் இயற்கை மருத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நசீம் உசேன்இந்த நிலையில்,…

டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

பட மூலாதாரம், ANIநடப்பு டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “இந்த விஷயங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன், இது குறித்து பிசிசிஐயிடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை. எல்லாம் ஐசிசியிடம் உள்ளது. ஐசிசி எந்த முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.” என்று அவர் பதிலளித்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாடப்…

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி… கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா… கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை வேறு அறிகுறிகள் மூலம் உணர முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபிஇந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், கொழுப்பு குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் சில கொழுப்புகள், புரத வளர்சிதை…

‘ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ – சிதைக்கப்பட்ட சுவர் ஓவியங்களை இவர்கள் எப்படி அணுகினார்கள்?

படக்குறிப்பு, ஆஷி இந்த வீடியோவை வெளியிட்ட பின்னரே, குவாலியர் சுவர்களில் உள்ள பெண்களின் ஓவியங்கள் சிதைக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. கட்டுரை தகவல்”நான் தற்போது பள்ளியில் படித்து வருகிறேன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் கல்லூரிக்குச் செல்வேன். எனக்காக நீங்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்? ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பிறகு நிஜ வாழ்க்கையில் அவர்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? இந்தச் சமூகத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா?”மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசிக்கும் 17 வயது ஆஷி குஷ்வாஹாவைச்…

திருமண நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், விஜய்! நேரில் சந்திப்பதை தவிர்த்தார்களா?

முதல்வர் மு.க. ஸ்டாலின்எனவே காலையில் மணமகள் வீட்டாரின் விருப்பப்படி இந்து செட்டிநாட்டு முறைப்படி நடந்திருக்கிறது திருமணம். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். தவிர சினிமா நடிகர் நடிகைகள் சிலரும் கூட திருமணத்தில் கலந்து கொண்டனர்.மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற்றது.இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். முதல்வர் முதலில் வரவேற்பில் கலந்து கொள்ளவே திட்டமிட்டிருந்ததாகவும் விஜய் அதில் கலந்து கொள்ள…

திமுக vs அதிமுக: தேமுதிக யாருடன் கூட்டணி? தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்எழுதியவர், ப.சிவசங்கர்பதவி, பிபிசி தமிழுக்காக8 பிப்ரவரி 2026, 08:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த முறை வெற்றி தேடித் தந்த அதே கூட்டணியை தக்க வைத்துக்கொள்வதுடன் புதிய கட்சிகளையும் உள்ளே கொண்டுவர திமுக விரும்புவதை அக்கட்சித் தலைவர்கள் தங்களது பேச்சு மூலம் அவ்வப்போது உணர்த்தியுள்ளனர். மறுபுறம் அதிமுகவும் வலுவான கூட்டணியை கட்டமைக்க தீவிரம் காட்டுகிறது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக…

1 82 83 84 85 86 529