சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ”நீதியின் வாள்”
மானிட்டரிங் பிரிவுபிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது.எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்கிய சகாக்களாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஐந்து அல்-காய்தா உறுப்பினர்களில் அவர் மட்டுமே இப்போது உயிரோடு…









