“அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ்; அவரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை!" – கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார். பின்னர் இல்லை என்றார். முந்தைய தேர்தலில்கூட அ.தி.மு.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பின்னர் அரசியல் வேண்டாம் எனச் சொல்லி ரசிகர் மன்றத்தை சந்தித்தார்….…








