தமிழ்நாட்டில் தொடரும் முதியோர் கொலைகள்: முதியோர் நிலை என்ன? அரசு செய்வது என்ன?
பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்20 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதிருநெல்வேலியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் தங்களது பாட்டியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலத்தில் முதிய தம்பதியை அவர்களின் பேரன் கோபத்தில் வீட்டில் வைத்துப் பூட்டி தீ வைத்து கொளுத்தியதாக வெளியான புகார் தொடர்பாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய முதிய தம்பதியை அவர்களின் கார் ஓட்டுநர் பணம், நகைக்காக திட்டமிட்டு கொலை செய்து புதைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு…








