கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? – BBC News தமிழ்
தங்கவேல் அப்பாச்சிஆசிரியர், பிபிசி தமிழ்9 ஆகஸ்ட் 2018புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்(2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.)ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக…









