சௌதி அரேபியா: ரொனால்டோவுக்காக கடுமையான திருமண சட்டம் வளைக்கப்படுகிறதா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ்9 மணி நேரங்களுக்கு முன்னர்சௌதி அரேபிய சட்டப்படி திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்றாலும், அங்கு ரொனால்டோ தனது காதலியோடு லிவ்-இன் உறவில் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.இது ஒருபுறமிருக்க, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்புக்கான தனது முதல் போட்டியில் விளையாடுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம், ரொனால்டோ இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை…








