மோதி குறித்த பிபிசி ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட மறுப்பு: செல்போன், லேப்டாப்பில் பார்த்த மாணவர்கள்
6 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் மோதி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். பாதுகாப்பு கருதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவண படம்…








