Browsing: செய்திகள்

ஆதார் கார்டில் சான்று இல்லாமல் முகவரி மாற்ற முடியும்.. எப்படி தெரியுமா?

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற இனி எந்தவொரு முகவரி சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. மக்களின் வசதிக்காக ஆவண சான்று இல்லாமலேயே முகவரியைப் புதுப்பிக்கும் வகையில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், வேறு வீடுகளுக்குக் குடிபெயரும் மக்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் நீண்ட செயல்முறை குறித்து இனி கவலைப்படத் தேவையில்லை. இப்போது ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும் மக்கள் எந்த ஒரு ஆவண சான்றுகளையும் வழங்காமல் UIDAI போர்ட்டல் மூலம் கார்டில் உள்ள…

அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

`கலா தபஸ்வி’ கே.விஸ்வநாத் மறைவு: பன்முகத் தன்மை கொண்ட பழம்பெரும் கலைஞர் காலமானார்! | Legendary Director and Actor K Viswanath passed away

ஒலிப்பதிவாளராக தன்னுடைய திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர், இயக்குநராக 53 படங்களை எடுத்துள்ளார். பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை தன் படங்களின் மூலமாகப் பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் இயக்கத்தில் ‘சங்கராபரணம்’, ‘ஸ்வாதிமுத்யம்’, ‘சாகரசங்கமம்’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.கே.விஸ்வநாத்மாற்றுச் சினிமாவின் முன்னோடியாகத் திகழ்ந்தவர், தமிழில் ‘குருதிப்புனல்’, ‘முகவரி’, ‘யாரடி நீ மோகினி’, ‘லிங்கா’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்…

இரட்டை இலை முடங்குமா? தேர்தல் ஆணையத்தின் பதிலால் பரபரப்பு

பட மூலாதாரம், Getty Images32 நிமிடங்களுக்கு முன்னர்ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்கள் வேட்பாளரை அதிகாரபூர்வ வேட்பாளராக ஏற்க வேண்டுமென எடப்பாடி தரப்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், “இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவுசெய்வாா்” என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு வரும்…

சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.44,040-க்கு விற்பனை

சென்னை: ஒரே நாளில் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90-ம் சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து சவரன் ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,955 டாலர் உயர்ந்தது. ஒன்றிய அரசின் வரி விதுப்பும் சேர்ந்ததால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. Source link

“என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர நினைக்கிறேன்” – கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு ஈரோடு பிளாட்டினம் மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்., பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்றார். எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தொல்.திருமாவளவன்மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, “ஜோடோ யாத்திரை மூலமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்ற ராகுல் காந்தி…

IND VS NZ: சுப்மன் கில்லின் ‘நடுங்க வைத்த’ ஆட்டம்; வரலாறு படைத்த இந்தியா

பட மூலாதாரம், Sportspics1 பிப்ரவரி 2023புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்முதல் 30 பந்துகளில் 46 ரன்களை பொறுமையாக சேர்த்திருந்தார் சுப்மன் கில். ஆனால் அடுத்த 33 பந்துகளில் 80 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். தொடக்கம் அமைதியாக அமைந்தாலும் முடிவு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய ஆட்டப்பாணியை வெளிப்படுத்தியிருக்கிறார் சுப்மன் கில்.. நியூசிலாந்தை சோதித்த இந்திய சூறாவளிடி20 ஆட்டத்தில் தனது முதல் அரைசத்தை பதிவு செய்ய சுப்மன் கில்லுக்கு 35 பந்துகள் தேவைப்பட்டன. அரைசதத்தோடு…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி

அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு 235 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66…

தன்னைப் போன்ற உருவ அமைப்புகொண்ட பெண்ணை தேடிக் கொன்ற இளம்பெண்! – `பகீர்’ சம்பவத்தின் பின்னணி என்ன? | German Woman Killed Lookalike To ‘Fake Her Own Death’

ஜெர்மனி நாட்டின், மைன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு 23 வயதான இளம்பெண் ஒருவர் காணாமல்போனதாக, அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதையடுத்து, போலீஸாரால் தேடிவரப்பட்ட அந்தப் பெண், கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காரில் சடலமாக மீட்கப்பட்டார். மர்ம மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார், தங்கள் மகள் காணாமல்போனதாகப் புகார் அளித்தவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு, உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் முடிவில், போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில்,…

வருமான வரி விலக்கு – நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images1 பிப்ரவரி 2023, 07:59 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு 87A-இன்படி தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு…

1 394 395 396 397 398 529