சக்கர நாற்காலி கழிவறை: தமிழ்நாட்டு பெண் உருவாக்கிய மாடல் தரும் சிறப்பு வசதி, கிடைத்த முதலீடு
பட மூலாதாரம், Shruti Babuகட்டுரை தகவல்”மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் உட்பட இந்தியாவில் சக்கர நாற்காலி தேவைப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது. இவர்கள் அனைவரும், தாங்கள் கழிவறை பயன்படுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழித்த பின்பு தங்களை சுத்தப்படுத்தி கொள்வதற்கும் அடுத்தவர்களின் உதவியை நம்பியே இருக்கின்றனர். ஆனால் இனி அவர்கள் அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை, தாங்களே சுயமாகவே இயங்கிகொள்ள நான் உருவாக்கியுள்ள பிரத்யேக சக்கர நாற்காலி அவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்கிறார் ஷ்ருதி பாபு.கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நடுத்தர…









