டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா – அமெரிக்க உறவுகளை மேலும் கசப்பாக்குமா?
பட மூலாதாரம், Andrew Harnik/Getty Imagesபடக்குறிப்பு, இந்த ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவிக்கும்போது, இந்தியாவை நட்பு நாடு என்று அழைத்தார். ஆனால் மற்ற எந்த நாட்டுடனும் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் கடுமையான மற்றும் பொருளாதாரத்துக்கு உகந்ததற்ற தடைகள் உள்ளதாகவும் கூறினார்.இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது…