CAG : `கோயில்களின் வரவு செலவைத் தணிக்கை செய்ய முடியாதா?’ – சி.ஏ.ஜி குற்றச்சாட்டுக்கு பதிலென்ன? | cag complaint agaist tn govt hr & ce department
மாநில அரசின் துறைகள் அனைத்திலும் தணிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரமிருப்பதாக அக்கவுன்டன்ட் ஜெனரல் தெரிவித்திருக்கிற நிலையில், அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து அந்தத் துறையின் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறுவது இதுதான்..“கோயில்களுக்கு மன்னர்கள் காலத்துல இருந்து நிறைய சொத்துகள், நிலங்கள்னு இருக்கு. தவிர உண்டியல், டொனேஷன்னு பக்தர்கள்கிட்ட இருந்தும் லட்சக்கணக்குல பணம் வருது, இந்தத் தொகைகள் முறையா கையாளப்படுதான்னு கண்காணிக்க ஆட்கள் வேணும்னுதான் அந்த அறநிலையத்துறை உருவாக்கப்பட்டுச்சு.சொல்லப் போனா அறநிலையத்துறை…