நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு…' – திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தப் படுகொலை தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி – சந்திரசேகர் தம்பதியினரின் மூத்த மகன்…