Browsing: செய்திகள்

சிரியா: நாடு திரும்பிய இந்தியர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, லெபனானுக்கான இந்திய தூதர் நூர் ரஹ்மான் ஷேக், சிரியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய குடிமக்களுடன் உள்ள இந்த புகைப்படம் டிசம்பர் 11 அன்று எடுக்கப்பட்டதுகட்டுரை தகவல்” எனக்கு இதற்கு முன்பும் இரண்டு முறை சிரியாவுக்கு விசா கிடைத்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் என்னால் செல்ல முடியவில்லை. இந்த முறை விசா கிடைத்ததும், கண்டிப்பாக செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அங்கு பார்த்த விஷயங்களும், நான் நாடு திரும்பிய நிலையையும்…

`மூடிக்கிடந்த சத்துணவு மையம்’ – பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்த 3 பேர் பணியிடை நீக்கம் | Rajapalayam government school inspection 3 person suspended

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக சத்துணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரிவுபடுத்தப்பட்ட சத்துணவு திட்டத்தின் படி, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? சத்துணவு பொருள்கள் இருப்பு உள்ளதா? என்பதை அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர். அதன்படி, ராஜபாளையம் சத்திரப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தை…

ஸ்ரீவைகுண்டம்: 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிகட்டுரை தகவல்ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சரளைக் கற்கள் முழுவதும் அடித்து செல்லப்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிய படி நின்றதை அறிந்து, உடனடியாக ரயிலை நிறுத்தி வைத்து, சுமார் 800 பயணிகளை காப்பாற்றிய ரயில் நிலைய (ஸ்டேஷன்) மாஸ்டர் ஜாஃபர் அலிக்கு ரயில்வேயின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே ஊழியர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ரயில்வேயில் பல்வேறு…

ரவிச்சந்திரன் அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ‘ஜாம்பவான்’ ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை (டிச. 18) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.அஸ்வின் எப்போதுமே இந்திய அணியில் ஒரு மேட்ச் வின்னர், விக்கெட் டேக்கர் என்பதை மறுக்க இயலாது.பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணிக்கு விக்கெட் எடுத்துக் கொடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தி, ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் அஸ்வின் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில தருணங்களில் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின்…

CAG : `கோயில்களின் வரவு செலவைத் தணிக்கை செய்ய முடியாதா?’ – சி.ஏ.ஜி குற்றச்சாட்டுக்கு பதிலென்ன? | cag complaint agaist tn govt hr & ce department

மாநில அரசின் துறைகள் அனைத்திலும் தணிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரமிருப்பதாக அக்கவுன்டன்ட் ஜெனரல் தெரிவித்திருக்கிற நிலையில், அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து அந்தத் துறையின் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறுவது இதுதான்..“கோயில்களுக்கு மன்னர்கள் காலத்துல இருந்து நிறைய சொத்துகள், நிலங்கள்னு இருக்கு. தவிர உண்டியல், டொனேஷன்னு பக்தர்கள்கிட்ட இருந்தும் லட்சக்கணக்குல பணம் வருது, இந்தத் தொகைகள் முறையா கையாளப்படுதான்னு கண்காணிக்க ஆட்கள் வேணும்னுதான் அந்த அறநிலையத்துறை உருவாக்கப்பட்டுச்சு.சொல்லப் போனா அறநிலையத்துறை…

கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்க்கும் மீனவர்கள் – என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல்கேரள மாநிலம் முனம்பத்தில் வக்ஃப் வாரிய நிலம் தொடர்பாக மூன்றாவது மாதமாகத் தொடரும் போராட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக நடக்கும் முயற்சி இது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை போராட்டக் குழுவினரும், பாரதிய ஜனதா மாநிலத் தலைவரும் மறுத்துள்ளனர். கேரள அரசு அமைத்துள்ள ஆணையம் தரும் அறிக்கைப்படி, இதற்குத் தீர்வு காணப்படும் என்று கேரள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பிபிசி தமிழிடம் உறுதியளித்துள்ளார்.முனம்பம் கிராமத்திலுள்ள 404…

சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

கட்டுரை தகவல்சென்னை அருகே எண்ணூரை அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். வழக்கறிஞர் ஆக வேண்டுமென்று கனவு காண்கிறார் அவர்.”நான் வழக்கறிஞர் ஆகி எங்கள் ஊரில் எண்ணூர் அனல்மின் நிலையம் போன்ற தொழிற்சாலைகளால் ஏற்படும் பிரச்னைகளை வரவிடாமல் தடுப்பேன். எங்கள் ஊருக்காகப் போராடுவேன்,” என்று கூறுகிறார் கோகுல்.எண்ணூரில் கடந்த 2017ஆம் ஆண்டு முழு ஆயுட்காலத்தை எட்டியதால் மூடப்பட்ட 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை, 660 மெகாவாட்…

Ambedkar: `கடவுள் பெயரை உச்சரித்துதான் அயோத்தியில் தோற்றீர்கள்; ஆனால் அம்பேத்கர்..’ – சீமான் காட்டம் | Seeman: NTK party seeman about amit shah and Ambedkar

“இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.” என்று அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து, நாடெங்கிலும் அமித் ஷாவிற்கும், பா.ஜ.கவிற்கும் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்…

1 282 283 284 285 286 531