Browsing: செய்திகள்

மே-03: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

“உலகை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்!”- சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் நியூசிலாந்து | New Zealand opens its borders to 60 more countries

கோவிட் தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இதற்கான தடை இப்போது அகற்றப்பட்டதால் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நியூசிலாந்துக்கு வருகை தருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பல நாடுகளிருந்து வரும் தங்கள் உறவினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நியூசிலாந்து மக்கள் இனிப்புகள் கொடுத்து நெகிழ்ச்சியுடன் விமான நிலையத்தில் வரவேற்று வருகின்றனர்.…

சாதிக் கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பிரபுராவ் ஆனந்தன்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பகுதியில், கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் மேஜர் அல்ல என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் இன்று திங்கள்கிழமை பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எல்லோருக்கும் சமத்துவமான அரசாக தங்கள் அரசாங்கம்…

தெர்மாகோல் எடுத்துகொண்டு கிளம்புங்கள்.. செல்லூர் ராஜுவுக்கு செந்தில் பாலாஜி ட்விட்

மதுரை சித்திரை விழாவில் ‘அணில்கள்’ வராமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று மின்வெட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக விமர்சித்த நிலையில், சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத்துறை  மானியம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது, அதனால் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை…

கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை..!!

கோவை: கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆறுக்குட்டி உதவியாளர் நாராயணசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உள்பட 200க்கும் மெர்க்கப்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. Source link

CSK :”ஒரு கேப்டன் இதையெல்லாம் செய்ய வேண்டும்!” – தலைமைப் பண்புகளை பட்டியலிட்ட தோனி!| “A captain is expected to do these things” – Dhoni

கேப்டன்ஸி குறித்து தோனி பேசியது:”கடந்த சீசனின் போதே கேப்டன்ஸி வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது ஜடேஜாவுக்கு தெரியும். அதற்குத் தயாராவதற்கு போதிய நேரம் அவருக்கு இருந்தது. இந்த மாற்றம் படிப்படியாக நிகழ வேண்டும் என நினைத்தோம். முதல் இரண்டு போட்டிகளில் நிறைய விஷயங்கள் என்னிடமிருந்து ஜடேஜாவுக்கு சென்றன. அதற்குப் பிறகு முடிவுகள் எடுக்கும் பொறுப்பை மொத்தமாக ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டேன். இந்த சீசன் முடியும்போது கேப்டன்ஸி வேறு யாரோ செய்த உணர்வு இருக்கக்கூடாது, வெறும் டாஸ்ஸுக்கு மட்டுமே கேப்டனாக இருந்த…

தமிழ்நாடு காவல்துறையில் அதிகரிக்கும் காவலர் மரணங்கள் – என்ன காரணம்?

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழ்57 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesமே தினம் உள்பட ஆண்டு முழுவதும் உழைக்கக்கூடிய துறையாக இருந்தாலும் காவல்துறையில் சர்ச்சைக்குப் பஞ்சமில்லை. ‘இதர அரசுத் துறைகளைப் போல எந்த விடுப்பையும் அனுபவிக்க முடியாது. இதனால் ஏற்படும் மனஉளைச்சல்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில். தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்கு ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைந்த ஆட்சியில்…

பெரியார் சிலையில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

பெரியார் சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முக்கிய  சீர்திருத்தவாதிகளில் ஒருவராக கருதப்படும் பெரியார் ஈ.வே.ராமசாமி கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கியவர். தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரியார் கூறிய இறை மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம்…

நிலக்கரி தட்டுப்பாடு- மேட்டூரில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2வது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட 1 அலகும் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 1400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி…

CSK: தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு! |Dhoni appointed as a new captain for Chennai super kings team

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார்.தோனி, ரவீந்திர ஜடேஜாசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும் தோனியே செயல்பட்டார். இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோதே தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே இருப்பார் என சென்னை சூப்பர்…