பெரியார் சிலையில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
பெரியார் சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முக்கிய சீர்திருத்தவாதிகளில் ஒருவராக கருதப்படும் பெரியார் ஈ.வே.ராமசாமி கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கியவர். தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரியார் கூறிய இறை மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம்…