31 பைசா தான் பாக்கி… விவசாயிக்கு அதிர்ச்சி கொடுத்த `ஸ்டேட் பேங்க்’ – கண்டித்த நீதிமன்றம்! | Gujarat HC slams SBI after it refused to provide a no-due certificate to farmer
குஜராத்தில் ஷாம்ஜிபாய் எனும் விவசாயி பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் ரூ.4.55 லட்சம் பயிர்க்கடன் பெற்றிருந்தார். ஷாம்ஜிபாய் கடந்த 2020-ல் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள தன்னுடைய நிலத்தை விற்க முடிவுசெய்தபோது, ராகேஷ், மனோஜ் வர்மா ஆகிய இருவர் ஸ்டேட் பேங்க்கில் ஷாம்ஜிபாயின் கடன் தொகையைச் செலுத்த முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, ஷாம்ஜிபாயின் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றுவதற்காக ராகேஷ், மனோஜ் வர்மா ஆகியோர் வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.ஆனால், ஷாம்ஜிபாயின் கடன்தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி, அவர்களின்…