ம.பி: பசுவைக் கொன்றதாக சந்தேகம்… பழங்குடியினர் இருவர் அடித்துக்கொலை! | 2 Tribals Accused Of Killing Cow Beaten To Death In Madhya Pradesh
மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்தில் பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக்கொல்லப்பட்டனர். 20 பேர் கொண்ட குழு , பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று, பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டி அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆனால், உயிரிழந்த பட்டியலினத்தவர்கள் பசுவைக் கொன்றார்களா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை.இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை…