ஷியாம் பெனகல்: இந்தியாவில் சமூகப் பொறுப்பு மற்றும் மாற்று சினிமாவின் முன்னோடியாக இவர் கருதப்படுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தி சினிமாவில் அர்த்தமுள்ள படங்களின் முன்னோடியாக ஷியாம் பெனகல் கருதப்பட்டார்.கட்டுரை தகவல்1970களில் இந்தி சினிமாவில் பாடல்கள், இசை, காதல் கதைகளுக்காக பெரிதும் அறியப்பட்ட சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் காலகட்டத்திற்கு சவால் விடும் வகையில் கோபமிகுந்த, துடிப்பான இளைஞர் ஒருவர் சினிமாவிற்குள் நுழைந்தார்.ஆனால் அவரது கோபம் யதார்த்தத்திலிருந்து விலகி, திரைப்படங்களின் மீது இருந்தது. விளம்பர உலகில் இருந்து வரும் ஒரு திரைப்பட இயக்குநர், சினிமாவை வெறும் பொழுதுபோக்கிற்கான வழிமுறையாகக் கருத மறுத்தது…