Browsing: செய்திகள்

நடிகர் அஜித் குமார் பிறந்த நாள்: இவரை பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?

4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், SURESH CHANDRAபடக்குறிப்பு, நடிகர் அஜித் குமார்’அமராவதி’யில் ஆரம்பித்து ‘காதல் மன்னன்’, ‘ஆசை’, ‘அமர்க்களம்’ என தொடர்ந்து ‘வலிமை’ வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது. மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாள். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.* சினிமாவில் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை…

முதலமைச்சரின் சொந்த ஊர்… எம்.எல்.ஏ. பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவாரூர் மாவட்டம் முதலமைச்சரின் சொந்த மாவட்டம் என்று சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழகமுமே முதலமைச்சரின் மாநிலம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில், இன்று மாணிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வினாக்கள் – விடை நேரத்தில்,  பேசிய திருவாரூர் உறுப்பினர் பூண்டி கலைவாணன் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.அதற்கு பதிலளித்த மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா…

பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

டெல்லி: பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. Source link

“சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்கவேண்டும்!”- அஜய் தேவ்கனைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து | Actress Kangana Ranaut wants Sanskrit to be our national language

நடிகர் அஜய் தேவ்கன் இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதற்கு கர்நாடகா அரசியல் தலைவர்கள் தொடங்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு இந்தி தேசிய மொழியா என்ற விவாதமும் எழுந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் இந்தி பேசாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருக்கிறார். அஜய்தேவ்கன் இந்தியைத் தேசிய மொழி என்று தெரிவித்திருப்பதை நடிகை கங்கனா ரணாவத் நியாயப்படுத்தி இருக்கிறார். கங்கனா ரணாவத்இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,…

பிரசாந்த் கிஷோர் பார்வையில் சிறந்த காங்கிரஸ் தலைவர் யார்? – பிபிசி சிறப்புச்செய்தி

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்7 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, பிரசாந்த் கிஷோர்தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற தமது பொது அடையாளத்தை அகற்றி விட்டு தலைவராகும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் பிரசாந்த் கிஷோர், வலுவான காங்கிரஸ் தேச நலனுக்கு அவசியம் என்று கூறியிருந்தார். எனினும், காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் யார் இருக்க வேண்டும் என்பதில், அவரது கருத்து பரவலாக வெளிப்படுத்தப்படும் கருத்துடன் மாறுபடுகிறது.காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியோ அவரது சகோதரி பிரியங்கா காந்தியோ வர வேண்டும் என்பது பிரசாந்த் கிஷோரின்…

Vintage car | வின்டேஜ் கார்களுடன் களைகட்டிய கோவை விழா..!

கோவை விழாவின் ஒரு பகுதியாக வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு  நடைபெற்றது. பல்வேறு வகையான 50 க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து  நடத்தி வரும் கோவை விழாவை முன்னிட்டு, பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தயசாலையில் உள்ள காஸ்மோபொல்டன்  கிளப்பில்  வின்டேஜ் கார்களின் அணவகுப்பு நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல்  பென்ஸ்,பியட் உள்ளிட்ட பல்வேறு கார்கள்…

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்

சென்னை: நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் இன்று 109.76 டிகிரி பாரன்ஹீட்டாக பகல் நேர வெப்பநிலை பதிவானது. Source link

31 பைசா தான் பாக்கி… விவசாயிக்கு அதிர்ச்சி கொடுத்த `ஸ்டேட் பேங்க்’ – கண்டித்த நீதிமன்றம்! | Gujarat HC slams SBI after it refused to provide a no-due certificate to farmer

குஜராத்தில் ஷாம்ஜிபாய் எனும் விவசாயி பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் ரூ.4.55 லட்சம் பயிர்க்கடன் பெற்றிருந்தார். ஷாம்ஜிபாய் கடந்த 2020-ல் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள தன்னுடைய நிலத்தை விற்க முடிவுசெய்தபோது, ராகேஷ், மனோஜ் வர்மா ஆகிய இருவர் ஸ்டேட் பேங்க்கில் ஷாம்ஜிபாயின் கடன் தொகையைச் செலுத்த முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, ஷாம்ஜிபாயின் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றுவதற்காக ராகேஷ், மனோஜ் வர்மா ஆகியோர் வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.ஆனால், ஷாம்ஜிபாயின் கடன்தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி, அவர்களின்…

தூக்கமும் உணவும்: ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன சாப்பிட வேண்டும்? – நிபுணரின் விளக்கம்

44 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஉடல் நலத்தை பாதுகாக்கும் வகையிலான உணவுப் பழக்கங்கள், உடலுக்கு தீங்கான உணவுகள் ஆகியவை தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் முதல் கட்டுரை இது.ஆழ்ந்த தூக்கம், அதற்குத் தேவையான உணவுகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன் அளித்த பதில்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன சாப்பிட வேண்டும்?நாம் சாப்பிட்ட உணவு செரித்த பிறகு அடுத்தவேளை சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு மருந்தே தேவையில்லை என்று திருவள்ளுவர்…

காயத்ரி ரகுராம் உட்பட 150 பேர் மீது வழக்குப் பதிவு – News18 Tamil

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பாஜக- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த 150 பேருக்கு மேற்பட்டோர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கரின்  131 வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது .சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க  விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஜகவினர் ஒரே நேரத்தில் கூடினர். அப்போது அவர்களுக்குள்…