கோவை முதியவருக்கு போலி இ-சலான் அனுப்பி மோசடி செய்த குஜராத் கும்பல் சிக்கியது எப்படி?
பட மூலாதாரம், TN POLICEகட்டுரை தகவல்சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வந்த தகவலை உண்மையென நம்பி, apk பைலை பதிவிறக்கம் செய்த கோவை முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் குஜராத் சென்று, இதில் தொடர்புடையதாக 10 பேரை கைது செய்து, 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ரூ.3.5 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.இதுபோன்று…









