Browsing: ஆரோக்கியம் | Health

சுயநினைவை இழந்த ஓட்டுநர்… 66 பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!|the boy who saved the lives of 66 school students!

அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் (Warren) நகரத்தில் அமைந்துள்ளது கார்ட்டர் இடைநிலைப் பள்ளி. இந்த பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள் பயணிக்கும் வண்டியை உடனடியாக நிறுத்த முயற்சித்து வண்டியை நிதானமாக இயக்கி இருக்கிறார்.இருந்த போதும் அவரால் இயலவில்லை. உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆள்களை அழைத்திருக்கிறார். டில்லன் ரீவ்ஸ்செய்தியைக் கூறிய சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். வண்டி போக்குவரத்து…

கருத்தடைக்கு பிறகு பெண்ணுக்கு பிறந்த குழந்தை; இழப்பீடாக ரூ. 3 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! | woman who conceived after family planning

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வாசுகி. இவரின் கணவர் விவசாய கூலி வேலைகளைச் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 2013-ம் ஆண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை (Tubectomy) செய்திருக்கிறார், வாசுகி. இந்த நிலையில் 2014 மார்ச் மாதத்தில் கருத்தரித்து, 2015 ஜனவரியில், இவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட நிலையிலும், மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை பிறந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த வாசுகி, உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த வாழ்க்கை…

Doctor Vikatan: தினமும் காலையில் எழுந்திருக்கும்போது தலைவலி… தீர்வு என்ன?| Doctor Vikatan: Headache when waking up … What is the solution?

இவை தவிர்த்து, கழுத்திலும் முதுகிலும் வலியை உணரச் செய்கிற ஸ்பைனல் தலைவலி (Spinal headache) என ஒன்று உண்டு. இப்படி தலைவலியில் பல வகை உண்டு. காலையில் எழுந்ததும் தலைவலி வருகிறது என்ற உங்களுடைய கவலைக்கு பொத்தாம் பொதுவாக பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு வருவது எப்படிப்பட்ட தலைவலி என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் சிறந்தது.எனவே உங்களுடைய பிரச்னையை பொது மருத்துவரை அணுகி, ஆலோசித்து, சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. அதன் பிறகு ஏதேனும் பரிசோதனைகள் தேவையா…

Doctor Vikatan: தொடர்ச்சியான ஏப்பம்… வெளியிடங்களில் தர்மசங்கடம்… தவிர்க்க வழி உண்டா? | Doctor Vikatan: Continue belching… is there a way to avoid it?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 50 வயது. அவருக்கு விடாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக அரைநாள் கூட இப்படி இருந்திருக்கிறது. ஜெலுசில் மாத்திரை போட்டால்தான் சரியாகிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்முதலில் ஏப்பம் வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும் நாம் விழுங்குவோம். அளவுக்கதிகமான காற்றை விழுங்கும்போது,…

Doctor Vikatan: முழங்கை மூட்டில் வலி… எலும்புகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி?

Doctor Vikatan: எலும்புகளின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? எனக்கு முழங்கைகளில் வலி உள்ளது. அதற்கான தீர்வையும் சொல்லவும்.- Shiva Kumar, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில்மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில் | சென்னைஎலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதச்சத்து ஆகிய மூன்றும் முக்கியம். கூடவே உடற்பயிற்சிகளும் மிக அவசியம். அதாவது வெயிட் டிரெயினிங் பயிற்சிகள் எலும்புகளை வலுவாக்கும்.…

`போர்ன்விட்டாவின் தவறான விளம்பரங்களை நீக்க வேண்டும்’ – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!|Bournvita gets NCPCR notice to remove advertisement

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விடாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.போர்ன்விட்டாஇதற்கு மறுப்பு தெரிவித்து போர்ன்விட்டாவின் மான்டெல் இந்தியா நிறுவனம், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. “சட்டரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால்…

நூறு நாள் வேலை: தேனீக்கள் கொட்டியதால், திண்டிவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இருக்கிறது பாம்பூண்டி கிராமம். இங்குள்ள ஏரியில், நேற்றைய தினம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100-நாள் வேலை) நடைபெற்றிருக்கிறது. அதில், 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் வேலை செய்து கொண்டிருந்தனர்.அவசர சிகிச்சை பிரிவு – திண்டிவனம் திண்டிவனம்: வீட்டில் சாராயம் தயாரிப்பு; காரில் கடத்தியபோது போலீஸில் சிக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்அப்போது, அங்கிருந்த புதர் பகுதி ஒன்றை சுத்தம் செய்ய முயன்றபோது, புதரிலிருந்த தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் பறக்கத்…

அழகின் பிம்பத்தை மாற்றும் டௌன் சிண்ட்ரோம் பார்பி பொம்மை… குவியும் பாராட்டுகள்! | Down syndrome barbie doll that changes the image of beauty… accolades are pouring in!

பார்பி பொம்மைகள் மாடல் அழகியைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும். அழகாக இருக்கும் இந்த பொம்மை தான் வேண்டும் எனக் குழந்தைகளும் கேட்பதுண்டு. இன்னும் பார்பியை போல மாற வேண்டும் எனச் சிகிச்சை செய்து கொண்ட பெண்களும் இருக்கின்றனர்.பார்பி Pixabayஅழகு குறித்தான பிம்பங்களைக் குழந்தைகள் சிறுவயதில் இப்படித்தான் பார்க்க வேண்டுமா… அப்படியெல்லாம் இல்லை, ஏற்றத்தாழ்வுகளைக் களைய, பரந்துபட்ட மக்களையும் அவர்களின் குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் டௌன் சிண்ட்ரோம் (Down Syndrome) பார்பி பொம்மைகளை உருவாக்கியுள்ளனர்.பார்பியின் மேட்டல் (MATTEL) கலெக்ஷனில் வெவ்வேறு…

Doctor Vikatan: ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்குமா பப்பாளிப்பழம்? | Doctor Vikatan: Does papaya increase blood sugar levels?

பப்பாளிப்பழத்தில் இந்த கிளைசெமிக் இண்டெக்ஸின் அளவு குறைவுதான். அதனால் 100 முதல் 120 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பது உங்கள் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தது. காலை உணவுக்கு இட்லியோ, தோசையோ, உப்புமாவோ எடுத்துக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்துடன் பப்பாளிப்பழம் சாப்பிடுவதாக இருந்தால், ஏற்கெனவே நீங்கள் சாப்பிட்ட காலை உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இருக்கும். பப்பாளியும் சாப்பிடுவதால் கிளைசெமிக் லோடு அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் எப்போதுமே பழங்களை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில்…

1 90 91 92 93 94 211