Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. குடல் தொடர்பாக இப்படி எந்தப் பிரச்னையுமே வராமலிருக்க நிரந்தர தீர்வுகள் ஏதேனும் உண்டா??பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணிமருத்துவர் பாசுமணிகுடல் ஆரோக்கியம் என்பதே அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை நம்பியே உள்ளது. அதிலுள்ள 100 டிரில்லியன் பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான அளவு…

செயற்கை கருத்தரிப்பு: `சூப்பர் ஓவுலேஷன் சிகிச்சை' என்றால் என்ன?; யாருக்கு தேவைப்படும்?

“சூப்பர்..!”இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை அர்த்தங்களை, எத்தனை நம்பிக்கைகளை எவ்வளவு நிறைவை, எவ்வளவு மனமகிழ்வைத் தருகிறது.! இதே வார்த்தையை, அதிக அர்த்தம் நிறைந்த, அத்துடன் நம்பிக்கையையும் மனநிறைவையும் அளிக்கும் குழந்தைப்பேற்றிலும் கருத்தரிப்பு சிகிச்சையின்போது பயன்படுத்துகின்றனர் மருத்துவர்கள்.ஆம்.! குழந்தைப்பேறின்மையில் மேற்கொள்ளப்படும் ஐ.யூ.ஐ, ஐ.வி.எஃப், இக்ஸி போன்ற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளின் முதல்படியே ‘சூப்பர் ஓவுலேஷன்’.. குறிப்பாக (Controlled Ovarian Hyperstimulation – COH) எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டல் தான் என்கின்றனர் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை…

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, ‘வயிறு சுருங்கிடுச்சு..’ என்பது சாத்தியமா?

ஒருவர் நன்றாகச் சாப்பிட்டே பழகியதாகச் சொல்வது அவரது வயிற்றின் கொள்ளளவை வைத்துதான். பொதுவாக ஒருவரால் 1.5 முதல் 2 லிட்டர் வரை வயிறு நிறையும்வரை சாப்பிட முடியும். அத்துடன் போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள். நம் உடலில் பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் ‘கிரெலின்’ (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன்…

Doctor Vikatan: மண்டையில் வெள்ளைப் படலம், பொடுகா, சொரியாசிஸா.. எப்படித் தெரிந்துகொள்வது?

Doctor Vikatan: எனக்குத் தலையில் பொடுகு அதிகமிருக்கிறது. தலை முழுவதும் வெள்ளையாகப் படிந்திருக்கிறது. சில இடங்களில் உப்புக்கல் மாதிரி இருக்கிறது. அதைக் கீறிக் கீறி அகற்றிவிட்டுதான் தலைக்குக் குளிக்கிறேன். ஆனாலும், மீண்டும் மீண்டும் வருகிறது. முடியும் அதிகமாகக் கொட்டுகிறது. இதற்கு என்ன காரணம்… தீர்வு என்ன?-Milo Kiru, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாதலையில் வெள்ளைநிறத்தில் காணப்படும் படலம் பொடுகுதானா என்பதை நீங்கள் முதலில் உறுதிசெய்ய வேண்டும். பொடுகு என்பது பெரும்பாலான மனிதர்கள் சந்திக்கிற பிரச்னையாக இருக்கிறது. வெயில் காலத்தில்…

அதிகரிக்கும் கொரோனா தொற்று; அச்சம் கொள்ள வேண்டுமா? – மருத்துவர் சொல்வதென்ன?

நம் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதோ 1009 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றிலும் குறிப்பாக கேரளாவில் 333 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 69 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம்.பொதுநல மருத்துவர் ராஜேஷ்”தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.…

Apollo: 'மூட்டுப் பாதுகாப்புத் திட்டம்' அறிமுகப்படுத்திய அப்போலோ

அப்போலோ மருத்துவமனை (Apollo Hospitals) இன்று சென்னையில் அப்போலோ மூட்டுப் பாதுகாப்புத் திட்டம் (Apollo joint Preservation Program) என்ற மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் எலும்பியல் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில் பல அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புதுமையான மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த மூட்டுப் பாதுகாப்பிற்கான மருத்துவ பராமரிப்பை முழுமையாக வழங்கும் பிரத்தியேக முனமுயற்சியாகும் மூட்டுப் பகுதியில் உருவாகும் ஆரோக்கிய பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு…

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

Doctor Vikatan:  கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர்குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை…

Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறவும், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும்  சமச்சீரான பல்வேறு விதமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். பசியோடு இருக்கும்போதோ, உணவு நேரத்தில் வழக்கமான உணவுக்கான மாற்றாகவோ வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறையுமே தவிர, சரிவிகித சத்துகள் கிடைக்காது. தினம் வாழைப்பழம் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தில் எல்லோரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குழந்தைகளுக்கு ஸ்மூத்தி செய்யும்போது வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். வொர்க் அவுட் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு முன்போ, செய்த பிறகோ வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாகவும்  கொடுக்கலாம்.மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற…

Doctor Vikatan: எல்லோருக்கும் விரதம் அவசியமா, விரதம் முடித்ததும் என்ன சாப்பிட வேண்டும்?

இன்று இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடுவது போன்ற இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைப் பின்பற்றலாம்.  விரதமிருக்கும் நேரத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது, பழங்கள் அல்லது பழச்சாறு குடிப்பது என உங்களுக்கு வசதியானதைச் செய்யலாம். விரதமிருப்பதை “ஒரு பொழுது’ என்று சொல்வார்கள். அதற்கேற்றபடி ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடலாம். விரதமிருப்பதன் பலன்களை இன்று மேற்கத்திய நாடுகள் பெரிய…

Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?

உதாரணத்துடன் விளக்கினால்  உங்களுக்கு இது எளிதில் புரியும். ஒரு பக்கம் மது பானங்களையும்,  இன்னொரு பக்கம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் வையுங்கள். மதுபானத்தில்  உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான். அதாவது ஆல்கஹால் எடுக்கும்போது கல்லீரல் அதை எப்படி மதிக்குமோ, அப்படித்தான் இந்த அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு சாப்பிடும்போதும் மதிக்கும். ஆல்கஹால் எப்படி கொழுப்பாக மாறுமோ, அதே போலத்தான் கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறும்.  மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும்,…

1 5 6 7 8 9 212