Browsing: ஆரோக்கியம் | Health

மகப்பேறுக்கு பிறகான மனசோர்வு’ – வாய்வழி மாத்திரைக்கு FDA அங்கீகாரம் | FDA approves first postpartum depression pill in the US

எனவே இதற்கு வாய்வழி மருந்தைப் பரிந்துரைப்பதன் மூலம் பிரசவத்துக்குப் பிறகான பெண்களின் மனச்சோர்வைக் குறைக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்” என FDA -ன் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மனநலப் பிரிவின் இயக்குநர் டிஃப்பனி ஆர். ஃபார்ச்சியோன் கூறியுள்ளார்.முன்பெல்யலாம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள பெரும்பாலான பெண்கள் ஆலோசகர்களை அணுகுவார்கள். நீண்ட காலம் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். தற்போது அதற்கெல்லாம் மாற்றாகத்தான் வாய்வழி மாத்திரையை அங்கீகரித்துள்ளது FDA. இதை பற்றி பேசியுள்ள, வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின்…

‘ஏழு பேரில் ஒருவருக்கு எரிஸ்’ – இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா |New COVID-19 variant ‘Eris’ spreading quickly in UK

எரிஸ் வைரஸ் பரவலால் தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற பொதுவான அறிகுறிகள்தான் தென்படுகின்றன. இங்கிலாந்தில் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இங்கிலாந்தில் புதிய வைரஸ் மேலும் பரவாமல் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கோவிட் 19 கொரோனா வைரஸ்“இந்த வாரம் அறிக்கையில், கோவிட் – 19 எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். வயதானவர்களிடம் தான் பெரும்பாலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.…

`இதுவரை 80 லிட்டர்!’ – தாய்ப்பால் தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வலர்கள் #BreastFeedingWeek

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் (1 முதல் 7 வரை) உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்பு இருந்த சூழலுடன் ஒப்பிட்டால், இன்றைக்கு தாய்ப்பால் புகட்டுதல் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான தாய்மார்களிடம் இருக்கின்றது. அதே சமயம், தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.கெளசல்யாSIDS: சிசுவுக்கு ஏற்படும் திடீர் மரணம், தாய்ப்பால் தவிர்க்கச் செய்யும்! | #BreastFeedingWeekதாய்ப்பால் தானம் செய்வது பற்றி மக்களிடையே தன்னார்வலர்கள், தொண்டு அமைப்பினர் பலரும் விழிப்புணர்வை…

Doctor Vikatan: இரு பெண் குழந்தைகளையும் அடிக்கடி தாக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு; தடுக்க வழி உண்டா? | Doctor Vikatan: Vomiting, diarrhoea, frequently affecting – Is there a way to prevent it?

Doctor Vikatan: என் முதல் பெண் குழந்தைக்கு 6 வயது. அடுத்த பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது. இருவருக்கும் அடிக்கடி வயிறு சரியின்றி போகிறது. வயிற்றுப்போக்கும் வாந்தியும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம்? தடுக்க முடியுமா?Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.மருத்துவர் சஃபி பொதுவாக 8 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டை பிரச்னையும், வயிறு தொடர்பான குடல் அழற்சி பிரச்னையும் (Enteritis ) சகஜமாக…

Doctor Vikatan: 7 வயதுப் பெண் குழந்தைக்கு உடலில் ரோம வளர்ச்சி; பிற்கால பிசிஓடி பாதிப்பின் அறிகுறியா? | Doctor Vikatan: Body hair growth in 7 year old girl; Is it a symptom of later PCOD damage?

Doctor Vikatan: என் 7 வயது பெண் குழந்தைக்கு நெற்றி மற்றும் கைகளில் அதிக ரோம வளர்ச்சி காணப்படுகிறது. அவளுக்கு புருவங்களும், தலைமுடியும்கூட மிக அடர்த்தியாக இருக்கின்றன. பிறந்தது முதல் அவளுக்கு இப்படியான ரோம வளர்ச்சி இருக்கிறது. இது பிற்காலத்தில் அவளுக்கு பிசிஓடி பாதிப்பை ஏற்படுத்துமா?Rajamanickam, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகாஆர். கார்த்திகா | மகப்பேறு மருத்துவர், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்10 வயதுக்குட்பட்ட…

பச்சிளம் குழந்தையின் திடீர் மரணம்… தாய்ப்பால் ஊட்டுவதால் தவிர்க்க முடியுமா? | #BreastFeedingWeek | Can breastfeeding prevent SIDS – Breast Feeding Week

குழந்தை படுக்க வைக்கப்படும் மெத்தை, குழந்தை வளர்க்கப்படும் சூழல், சுவாசிக்கும் காற்றின் தன்மை, குடும்பத்தார் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், கொசுவத்திப்புகை எனப் பல்வேறு காரணங்கள் சில நேரங்களில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் குழந்தை உயிரிழக்கக் காரணமாகலாம். மிருதுவான மெத்தையில் படுக்க வைக்கும்போது, குழந்தை குப்புற விழுந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. இவை மரணத்திலும் முடியலாம். சிசுRepresentational Imageதாய்ப்பால் கொடுப்பதால் SIDS மரணங்களைக் குறைக்க முடியுமா? தாய்ப்பால் கொடுப்பதால் நிச்சயமாக இவ்வகை மரணங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில்,…

நீ யாரு…? – குணசீலத்துக் கதை – 5 | My Vikatan | My vikatan psychology article series

கவுன்சிலிங் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. “மனோகர் மனோகர்…”, என்று மூச்சுக்கு மூன்று முறை கேட்கும் வாணியிடம், “மனோகர் வந்துருவாரு…!” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கச்சொன்னார் வரதராஜன்.கவுன்சிலிங் இறுதிகட்டத்தை எட்டியது.“அழைக்கும்போது நீங்க மட்டும் உடனே உள்ளே வாங்க..”- என்று வாணியின் கணவர் பரமசிவத்துக்குச் சொல்லிவிட்டு, மற்ற யாரும் வந்துர வேண்டாம். என்றும் கண்டிப்பாகக் கூறினார் வரதராஜன்.‘அறிதுயில் சிகிச்சை’ தொடங்கித் தொடர்ந்தார் சைக்காலஜிஸ்ட். தன் எதிர்பார்ப்பின்படி, வாணி செயல்படத்துவங்கிய நேரம், வாணியின் முன் அந்த மேக்ஸி சைஸ் புகைப்படத்தைக் காட்டிக்…

`மருந்துக்கு பதில் ஆசிட் செலுத்திய மருத்துவர்கள்’ – தவறான சிகிச்சையால் தவிக்கும் அமெரிக்க பெண்!|US Woman Claims Her Fertility Doctor Accidentally Injected Acid Into Her Womb

அதனால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் அவர்கள் எனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் என் பிறப்புறுப்பு பலத்த காயமடைந்துள்ளது. என்னால் நிம்மதியாக உட்காரக்கூட முடியவில்லை, அமர்ந்தால் கடுமையான வலியை உணர்கிறேன். இனி எனக்கு குழந்தை பிறக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. என் வருங்காலத்தை நினைத்து பயமாகவுள்ளது” என வேதனையுடன் பகிர்ந்துள்ளார் கிறிஸ்டின்.மருத்துவர் இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கையில், கிறிஸ்டினின் கருப்பையில் செலுத்தப்பட்ட அமிலமானது 85% செறிவுடன் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.…

How to: மருத்துவ குணமுள்ள அத்திக்காயை ருசியாக சமைப்பது எப்படி? | How To Cook Figs In Easy Methods?

அத்தி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அத்திப்பழம், உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது. கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும் அத்திப்பழத்தைப் பெரும்பாலானோர் தேனில் ஊற வைத்தும், காய வைத்துப் பொடியாக்கியும் சாப்பிட்டிருப்போம்.ஆனால், இளம் காயாக இருக்கும் அத்தியைப் பறித்து ருசியாக சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல். வாய் ருசிக்க அத்திக்காயை சமைப்பது எப்படி, அதன் எளிமையான செய்முறை உள்ளிட்டவற்றை விவரிக்கிறார் மேட்டூரை…

“தாய்ப்பாலூட்டலை அதிகரிக்க அரசு இவற்றையெல்லாம் எப்போது செய்யும்?!’’ | #BreastFeedingWeek

பணி இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கென்று தனி நேரம், குழந்தைகள் காப்பகம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தினால், தாய்ப்பால் புகட்டல் விகிதம் அதிகரிக்கும் என்கிறார் தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன். பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் ஆலோசகர்…

1 58 59 60 61 62 211