Doctor Vikatan: வாகனம் ஓட்டும்போது ஏற்படும் நெஞ்சுவலி; இதற்கான முதலுதவி என்ன?
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், பயணிகள் நலனுக்காக நெஞ்சுவலியைப் பொறுத்துக்கொண்டு அவர்களை பத்திரமாக இறக்கிவிட்ட பிறகு மருத்துவமனைக்குச் சென்ற அவர் உயிரிழந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தோம். அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோம். இதுபோன்ற நிலையில் பெரும்பாலும் இவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்நிலையில் உடனிருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?- ரகுராம் (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.“இந்தச் சம்பவத்தில்…