Browsing: ஆரோக்கியம் | Health

போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது? | Doctor Vikatan: How to identify fake paneer?

பார்ப்பதற்கோ, தன்மையிலோ அசல் பனீரை போலவே காட்சியளிப்பதால், பலருக்கும் அது அசலா, போலியா என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு, பிரிசர்வேட்டிவ் மற்றும் தரமற்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் போலி பனீரானது, இதயநோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்தக் காரணமாகின்றன. கல்லீரலையும் பாதித்து, செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.அப்படியானால் இத்தகைய போலி பனீரை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழலாம். முதல் விஷயம், பனீரின் விலை. அசல் பனீர், 200 கிராம் 80 முதல் 100 ரூபாய்…

வெர்டிகோ பாதிப்பு குறித்து விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா | Deepika, an ear, nose and throat doctor, explains about vertigo

பெரும்பாலான நபர்களுக்கும் இந்த முதல் அறிகுறி நினைவில் இருப்பதைப் பார்க்கலாம். தேவையான தகவல்களைத் திரட்டியதும், இ.என்.டி தொடர்பான மற்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.அதாவது, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதையடுத்து பிரத்யேகமான இ.என்.டி பரிசோதனைகள் செய்யப்படும்.மருத்துவப் பரிசோதனைகள்கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியோகிராம் சோதனை செய்யப்படும். கூடவே, காதின் உள்ளே உள்ள அழுத்தமும் அளவிடப்படும். அதற்கு “இம்பீடன்ஸ்’ என்று பெயர். அதையடுத்து உள்காது எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான டெஸ்ட் செய்யப்படும்.இப்படிச் செய்யப்படுகிற ஒவ்வொரு பரிசோதனையுமே இந்தப் பிரச்னையை…

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும் போதெல்லாம் பிரெகன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் காட்ட வாய்ப்பிருக்கிறதா? வேறு எந்த விஷயங்களை எல்லாம் இதில் கவனிக்க வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்கர்ப்பத்தை உறுதிசெய்ய சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்யப்படும். அந்தப் பரிசோதனையில், ரத்தத்தில் ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin) என்ற…

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீடுகளில் இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. இது உண்மையிலேயே அவசியம்தானா, பிறந்த குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது பாதுகாப்பானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ‘மூலிகைமணி’ அபிராமி. சித்த மருத்துவர் அபிராமிநீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த மருந்துக்கு ‘வேப்பங்காரம்’ என்று பெயர். 6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.குழந்தை பிறந்த…

பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி திடீர் மரணம் மரணம் – போலீசார் விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பொறியாளர் ஆகாஷ்தீப் குப்தா மரணமடைந்துள்ளார்.30 வயதான ஆகாஷ்தீப் குப்தா, பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு பிரிவில் சிஸ்டம் இன்ஜினீயராக பணியாற்றி வந்திருக்கிறார்.லக்னோவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், உணவுக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமாகியிருக்கிறது. குடும்பத்தினர் அவரை லோக்பந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக…

பட்டாசு வெடிக்கும்போது என்ன துணியில் ஆடை அணிய வேண்டும்? – What kind of clothes should you wear when setting off fireworks?

“‘பொதுவாகவே தீபாவளிக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் உடுத்துபவர்கள் உண்டு. அதில் தவறில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி, நம் எல்லாருக்கும் தெரிந்த காட்டன் எனப்படும் பருத்திதான். காட்டன் உடைகளும் எளிதாக தீ பற்றி எரியக்கூடியதே என்றாலும் அதை அணிவதே பாதுகாப்பு.எடுத்துக்காட்டாக, தீபாவளி அன்று ஒருவர் காட்டன் உடை அணிந்தும், மற்றொருவர் synthetic fabric வகையில் ஒன்றான பாலியஸ்டர் உடையை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இவை…

இதயத்தில் பொருத்ப்பட்ட stent நகருமா, வெளியே எடுக்க வாய்ப்பிருக்கிறதா? | Can a stent placed in the heart move, and is it possible to have it removed?

ஸ்டென்ட்டுகளில் லேட்டஸ்ட்டாக, தானாக உறிஞ்சப்படும், “பயோ அப்சார்பபிள்’ ஸ்டென்ட்டுகள் (bioabsorbable stent) வந்துள்ளன. அந்த வகை ஸ்டென்ட்டை உள்ளே பொருத்திவிட்டால், அது 6 முதல் 8 மாத காலத்திற்குள் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால், இந்த வகை ஸ்டென்ட்டில் சில சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பதில்லை. இது எதிர்பார்த்த அளவு ரிசல்ட்டையும் கொடுப்பதில்லை.தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. அது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிற உலோகம் என்பதால் பெரும்பாலும் பிரச்னைகளைத்…

SIMS: தென்னிந்தியாவில் முதன் முறையாக பெருந்தமனி வால்வின் அடைப்பை சரி செய்த சிம்ஸ் மருத்துவமனை

30 வயதிற்கு கீழ்ப்பட்ட நோயாளிகளில் பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பு ஆகியவற்றின் கலவை கண்டறியப்படுவது மிகவும் அரிதாகும். ஏறக்குறைய ஒரு முட்டைப்போல எளிதில் உடையக்கூடிய அதிக கால்சியம் படிந்த வால்வில் ஒட்டுவதும், தையலிடுவதும் மிக கடினமானது; அதிக ஆபத்து வாய்ந்ததும் கூட. சென்னை, அக்டோபர் 07, 2025 : ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் அவதிப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவரின் உயிரை…

சித்த மருந்துகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: போலி மருந்துகளை அடையாளம் காணுவது எப்படி? | Where to buy authentic/quality Siddha medicines, and how to confirm their quality, given the presence of fake ones?

மருந்தின் லேபிளில் அது எப்போது தயாரிக்கப்பட்டது, அதன் காலாவதி தேதி, என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தால், பயமின்றி பயன்படுத்தலாம்.  அலோபதியில் போலி மருத்துவர்கள் உள்ளதுபோல சித்த மருத்துவத்திலும் இருக்கிறார்கள்.டாம்ப்கால், இம்ப்காப்ஸ் போன்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, மருந்துகள் லேபிளுடன் வரும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தரக்கட்டுப்பாட்டையும் பின்பற்றியிருப்பார்கள் என்று நம்பலாம். எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், மருந்து தயாரிப்பில் ஏமாற்று வேலைகளைச் செய்வோரிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நிலவேம்புஉதாரணத்துக்கு, நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வோம். அதில் முறையாகச் சேர்க்க வேண்டிய…

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா?பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் ‘இல்லை’ என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன.தரையில் படுப்பது நல்லதா, கெட்டதா…